பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தான். சுத்தமான பாலை, தண்ணீர் கலப்பில்லாத பாலைத் தாமே உவந்து உவந்து அவை சொரிந்தன. 'பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன, மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே” என்கிறார் திருமூலர். பார்ப்பான் யார்? அகத்திலே கண் கொண்டு பார்க்கின்றவன் பார்ப்பான். அவனுடைய உடம்பிலே பஞ்சேந் திரியங்களாகிய ஐந்து பசுக்கள் இருக்கின்றன. மேய்ப்பார் இல்லாமையினால் அவை வெறித்துத் திரிகின்றன. அவற்றை மேய்ப்பவனாகிய ஞானம் கிடைத்துவிட்டால் பார்ப்பானுடைய பசுக்கள் ஐந்தும் வெறி அடங்கிச் சாந்த மென்னும் பாலைச் சொரியும். அடங்காமல் திரிகிற ஐந்து மாடுகள் வாழும் கொட்டில் இந்த உடம்பு. நாற்றத்தில், கொசுக்கடியில் எத்தனை காலம் வாழ்வது? மாமிசம் நிரம்பிய இந்தக் கொட்டிலை விட்டுப் போகவேண்டும். எங்கே போவது? முத்தியாகிய வீட்டுக்குப் போக வேண்டும். வீடு நம்முடைய விருப்பப்படி இருக்கிற இடம் வீடு. நாம் போகிற ஒர் ஊரில் ஒரு நண்பருடைய இல்லத்தில் எத்தனைதான் வசதிகள் இருந்தாலும் நமக்கு அங்கேயே நெடுநாள் இருப்புக் கொள்ளுவதில்லை. காரியாலயத்திற்குப் போகிறோம். நம் ஆணைக்குக் கைகட்டி நிற்க அங்கே சேவகர்கள் இருக்கிறார்கள். நல்ல அற்புதமான அறை நமக்காகவே இருக்கிறது. மின்விசிறி சுழலுகிறது. வீட்டில் விசிறி இல்லை. வேலையாட்கள் இல்லை. இருந்தாலும் மாலை ஐந்து மணிக்குமேல் ஒரு நிமிஷம்கூடக் காரியாலயத்தில் தங்க மனம் வருவதில்லை. வீட்டுக்கு வந்து உட்காரும்போது எத்தனை ஆறுதலோடு, 'அப்பாடி!' சொல்லு கிறோம். காரணம் என்ன? காரியாலயத்தில் பிறருடைய கட்டுப் பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. வீட்டிலே நம் மனம்போல இருக்க முடிகிறது. எத்தனை வசதிகள் இருந்தாலும் அடிமை நிலையில் இன்பம் வராது. சுதந்தரமாக இருக்கும் 1838