பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 3 இத்தகைய அரிய வழியைக் காட்டியவன் யார்? அம் குறச்சிறுமான் பணம்காட்டும் அல்குற்கு உருகும் குமாரன் வள்ளிக்கு உருகியவன் வெள்ளி நாயகியினிடம் இன்பம் பெறுவதற்காக ஏங்கி உருகும் குமாரக் கடவுள் அந்த வழியைக் காட்டினானாம். உடம்பை அபிமானிக்காமல் மோட்ச வீட்டை அடைய வழி காட்டினவன், ஒரு பெண்ணிடத்தில் மயல் கொண்டு உருகி னான் என்பது சரியாகத் தோன்றவில்லை. பெண் இன்பம் உடம் போடு சார்ந்தது. உடம்பின் அபிமானத்தை ஒழிக்காமல் அதற்கு இன்பம் தேடிய ஒருவனா சரீர அபிமானம் போக வழி காட்டினான்? இது முரணாக அல்லவோ இருக்கிறது? - இப்படிப் பல ஐயங்கள் சிலருக்கு எழலாம். முன்பே பல முறை, வள்ளி நாயகியை முருகன் திருமணம் செய்து கொண்டதன் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அவன் காதல் உடையவனைப் போலக் காட்டிக் கொண்டது, வள்ளியைத் தடுத்து ஆட்கொள்வதற்காகத்தான். ஆன்மாவாகிய வள்ளி நாயகியைப் பதியாகிய முருகன் கருணையினால் வலியச் சென்று ஆண்டு கொண்டான். வள்ளி நாயகியின் திருமணத்தில் முருகனுடைய பெருங்கருணை புலனாகிறது. அவன் கொண்ட காதல் காமத்தால் விளைந்ததன்று; கருணையின் வேறு உருவமே அது. இதனை நினைப்பூட்டவே இங்கே, உருகும் குமாரன்' என்று சொன்னார். குமாரன் என்ற சொல்லுக்கு மாரனைக் குலைக்கும் பான்மையை உடையவன் என்று பொருள். முருகனுடைய அடியார்களிடத் திலேயே காமன் வாலாட்ட முடியாது என்றால் முருகனிடம் அவன் என்ன செய்ய முடியும்? முருகன் ஞானமூர்த்தி, அந்தப் பெரு நெருப்புக்கு முன் காமமாகிய ஈரம் நிற்குமா? முருகன் வள்ளியை ஆளவேண்டும் என்று உருகினான். ஆனால் அவன் போட்ட நாடகத்தில் அவளது இன்பத்தை விரும்பி உருகியவன் போல காட்டிக் கொண்டான். அப்படிக் காமத்தில் அகப்படுபவன் அல்ல அவன். மாரனைக் குலைக்கும் பான்மையையுடைய 90)