பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை குமாரன் அவன். இதனை நினைவுறுத்த வேண்டியே இந்த இடத்தில் குமாரன் என்ற திருநாமத்தை அமைத்தார். அருணகிரியாரின் இரக்கம் அருணகிரி நாதர் தமக்கு வழி காட்டிய குரு தேசிகன் வள்ளிக்காக உருகுபவனைப் போல் வந்து ஆண்டவன் என்றார். பின்பு, அந்தப் பெருமானை வணங்கி உலகத்தில் பலர் பயன் அடையாமல் இருக்கிறார்களே என்ற இரக்கம் தோன்றியது. 'இப்படி வணங்காமல் வீணாகப் போகிறார்களே! என்று சொல்ல மனம் வராமல் அந்தக் குறையைத் தம் தலைமேல் போட்டுக் கொண்டார். 'என் தலை வணங்காமல் இருக்கிறதே!' என்று கூறினார். முன்னாலே, 'வீடெய்தி நிற்க நிற்கும் குணம் காட்டி ஆண்ட குருதேசிகன்' என்று சொன்னபோது, அவர் இறைவனை வணங்கி நல்ல வழியில் நின்று உடற்பற்றை விட்டு வீடு அடையும் தகுதியைப் பெற்றுவிட்டது தெரிகிறது. இப்போது நேர்மாறாக, "ஐயோ! உன்னை வணங்காத தலை வந்து வாய்த்து விட்டதே!' என்று வருந்துகிறார். முரண்பாடா? ‘சுவாமி, முன்னாலே நீங்கள் பேறு பெற்றதைச் சொல்லி விட்டு, இப்போது இப்படிப் புலம்புகிறீர்களே! எது உண்மை?” என்று அருணகிரிநாதரை நாம் கேட்கலாமா? அவர் இயல்பு நமக்குத் தெரியும். அவர் முருகன் திருவருளை முழுமையாகப் பெற்றவர். அவன் அருளின்பக்கடலில் திளைக்கிறவர். ஆனாலும் உலகில் துன்புறுகின்ற மக்களைக் கரையேற்ற வேண்டும் என்ற பெருங்கருணை கொண்டு வாயில்லாப் பூச்சிகளாகிய அவர் களுக்காகப் பல பாடல்களைப் பாடினார். அவர்கள் குறைகளைத் தம்முடையனவாகவே வைத்துப் பாடினார். குறைகளைச் சொல்லி வருந்தும் பாடல்கள் அவர் பெருங் கருணையைக் காட்டுவன: அநுபவத்தைக் கூறுபவை அவர் பெருமையைக் காட்டுவன. அவற்றைத் தனித்தனியே சொல்வதுதான் அவருக்குப் பெரும் பான்மையான வழக்கம். ஆனால் இங்கே இரண்டையும் ஒரே பாட்டில் வைத்துவிட்டார். முன் பகுதியில் தாம் பெற்ற 191.