பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வீட்டுக்கு வந்தால் இரண்டு கைகளையும் பூமியில் வைத்து முழங்காலை மண்டியிட்டுக் கொண்டு நெற்றி நிலத்தில் படும் படியாக வணங்குவதும் உண்டு; இதற்குப் பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர். தலை, இரண்டு கை, இரண்டு கால் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுவதால் பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர் வந்தது. பெண்கள் இப்படி வணங்குவது வழக்கம். ஆண்டவன் சந்நிதியில் வணங்கும்போது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம். சாஷ்டாங்கம் என்பதற்கு எட்டு அங்கங்களுடன் செய்வது என்று பொருள். நெற்றி, இரண்டு கை, மார்பு, இரண்டு பாதம், இரண்டு முழங்கால் ஆகியவை நிலத்தில் படும்படியாக வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம். கீழே விழுந்து வணங்குவதைத் தண்டம் சமர்ப்பிப்பது என்றும் சொல்வார்கள். அதற்கு அபராதம் செலுத்துவது என்று பொருள் அல்ல. தண்டம் என்பது தடி. தடி சாய்ந்து விழுவது போல உடம்பு ஆண்டவன் சந்நிதானத்தில் கீழே விழுந்து வணங்கு வதனால், தண்டம் சமர்ப்பிப்பது என்று கூறுவர். தண்டாகரமாக விழுந்தேன்' என்று சொல்வது உண்டு. அது செய்யும் செயல் எல்லாவற்றையும் நான் விட்டு விட்டேன்' என்பதற்கு அறிகுறி. இறைவனுடைய சந்நிதானத்தில் இந்த உடம்பு கீழே கிடப்பதை அன்றி இதற்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. இருட்டாக இருக்கும் இடத்தில் விளக்கு மிகவும் பிரகாசமாக ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கதிரவன் தோன்றிவிட்டால் அந்த விளக்குப் பயன் அற்றதாகப் போகிறது. அது அப்போது தன்னைக் காட்டிக் கொண்டு நிற்குமே தவிர வேறு பொருளைக் காட்டுகின்ற அவசியம் அதற்கு இல்லாமல் போகிறது. ஆண்ட வனை உணராத இடங்களில் எல்லாம் இந்த உடம்பு கால் களையும், கைகளையும் ஆட்டிப் பலவிதமான செயல்களைப் புரியும். ஆண்டவனுடைய சந்நிதானத்த்தில் இது செயலற்றப் போகும். அப்படிப் போவதுதான் முறை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர்களுக்கு உலகம் முழுவதுமே இறைவனுடைய சந்நிதானந்தான். ஆகையால் அவர்கள் எப் போதுமே செயல் ஒழிந்து நிற்கிறார்கள். அந்தச் செயல் மாண்ட நிலையை, 198