பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் காங்கள் கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக்கலந்து ஆண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்றுஉள்ள வாசகம்மாண்டு என்னுடைய செயல்மாண்ட வாயாடித் தெள்ளேணம் கொட்டாமோ!' என்று பாடுகிறார் மணிவாசகப் பெருமான். ஆகையால் இறைவன் சந்நிதானத்தில் தடிமாதிரியாக உடம்பைக் கீழே விழச்செய்து வணங்குகிறோம். அவனே எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணம் என்பதையும், இந்த உடம்பினாலே செய்கின்ற செயல் ஒன்றும் இல்லை என்பதையும் அந்த வணக்கம் காட்டுகிறது. கும்பிடுவதன் கருத்து அதுபோலவே கையைக் கூப்புவதும் செயல் ஒழிந்த நிலையைக் காட்டும். கையைக் கூப்புவதைத்தான் தொழுவது என்று சொல்வார்கள். 'கைகாள் கூப்பித் தொழிர்' என்று அப்பர் பாடுகிறார். "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி” என்பது மணிவாசகர் திருவாக்கு. கை குவிப்பதை அஞ்சலி என்று வடமொழியிலும், கும்பிடு என்று தமிழிலும் சொல்கிறோம். கும்பிடும்போது இரண்டு கைகளும் ஒன்று சேருகின்றன. இயற்கையாக நம்முடைய கைகள் விரிந்து பல பல செய்கை களைச் செய்கின்றன. இறைவனுடைய சந்நிதானத்தில் அந்தச் செய்கைகள் எல்லாம் ஒழிந்து ஒன்று சேர்ந்து குவிகின்றன. கைகளைக் குவிப்பதனால், 'ஆண்டவனே, இனி என்னுடைய செயல் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். எல்லாம் உன் னுடைய அருட்செயலே' என்ற நினைப்பைக் காட்டுகிறோம். போலீஸ்காரர் ஒருவனைக் கைது செய்தால் கையைத் தூக்கும்படி சொல்வார்கள். அவன் கையை மேலே தூக்குவான். 'என் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. நான் என் கைகளை உப யோகப்படுத்த மாட்டேன். உங்கள் வசம் ஆகிவிட்டேன்' என்பதற்கு அடையாளம் அது. அப்படியே இறைவனிடத்தில் அடிமை பூண்டு எல்லாம் அவன் செயல் என்ற உணர்ச்சி விஞ்சி, "ஆண்டவனே, இனி எனக்குச் செயல் இல்லை' என்று உணர்த் தும் அறிகுறியே கும்பிடு. 35.Gl&m.Ij 1--14 199