பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்று இலங்கையில் சிறை வைத்துவிட்டான். இவர் நினைத்திருந்தால் பிராட்டியைத் தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே தம்மிடத்தில் அழைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பிராட்டி சிறைப்பட்டிருந்த இலங்கை சென்றார். விபீஷணனுக்கு அருள் செய்ய வேண்டி அவன் இருந்த இடத்திற்கே போனார். அப்படிப் போகும்போது இடையிலுள்ள கடலுக்குப் பாலம் கட்டிச் சென்றார். அந்தப் பாலத்தை அவர் தாமாகக் கட்ட வில்லை. குரங்குகளைப் படையாகக் கொண்டு கடலை அடைத்துப் பாலம் கட்டச் செய்தார். அத்தகைய பெரியவராகிய இவருடைய மருகன் தான் நாம் பார்க்கப் போகிற பெருமான்' என்று அருணகிரியார் இராமாவதாரத் திருமாலை அறிமுகம் செய்து வைக்கிறார். கவியால் கடல் அடைத்தோன் மருகோனை. 'குரங்குகளினால் கடலை அடைத்த திருமாலின் மாப்பிள்ளை யாகிய முருகனைப் பார்க்கலாம் வா' என்று உள்ளே அழைத்துப் போகிறார். 'உள்ளே இருக்கிற பெருமானுக்கு இவர்தான் மாமா. இவர் ஒரு குரங்காட்டி' என்று சொல்வது போல அல்லவா கூறி அறிமுகம் செய்து வைத்தார்? இது மதிப்புடைய அறிமுகம் ஆகுமா? இதைச் சற்றே பார்க்கலாம். பயனுள்ள அறிமுகம் நிரம்பப் படித்த ஒருவர் வேலை தேடி என்னிடத்தில் வரு கிறார். "நான் எம்.ஏ, படித்து இருக்கிறேன். கிரிக்கெட் விளைய ாடுவேன். என்னைப் போல நீந்துபவர் யாரும் இல்லை. கல்லூரி யில் முதல் பரிசு பெற்றவன் நான்' என்று பல வகையாகச் சொல்லிக் கொள்கிறார். அதனால் என்ன பயன்? அவை யாவும் உண்மையாக இருக்கலாம். பத்திரிகை ஆசிரியனான என்னிடத் தில் வேலை வேண்டுமானால், நான் கட்டுரை, கதை எல்லாம் எழுதுவேன். நன்றாக ப்ரூப் திருத்துவேன்' என்று சொன்னால் உடனே அவரால் நமக்கு உபயோகம் உண்டு என்று எண்ணுவேன். ஒரு நோயாளி தவிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை வைத்தியத்தில் மிகவும் கெட்டிக்காரரான ஒரு 202