பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் டாக்டரிடம் அழைத்துப் போகிறோம். டாக்டருடைய வீட்டுக்குள் போனவுடன் நம்முடன் வந்திருக்கும் நோயாளிக்கு, "இவர்தாம் டாக்டருடைய மைத்துனர். டாக்டருக்கு நான்கு பெண்கள் உண்டு. மூத்த பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இரண் டாவது பெண்ணுக்கு வரன் தேடுகிறார். இந்தக் கார் இப்போது தான் வாங்கினார்' என்று அறிமுகம் செய்து வைத்தால் அவனுக்குச் சலிப்பு ஏற்படுமேயன்றி அதனால் அவனுக்கு என்ன பயன் உண்டாகும்? இவை எல்லாம் உண்மையே என்றாலும் எல்லா உண்மையையும் எல்லா இடங்களிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த இடத்தில் எந்த உண்மையைச் சொன் னால் பயன் உண்டோ அதைச் சொல்லவேண்டும். நம்முடன் வருகிறவனோ நோயாளி. அவனிடம், 'போன மாதம் கூடிய ரோகத்தால் பீடிக்கப்பட்ட ஒருவர் இவரிடம் வந்தார். ஒரே மாதத்தில் குணம் ஆகிவிட்டது. அதோ அந்த அம்மாளுக்கு இருதயமே கெட்டு இருந்தது. அதைச் சரிப்படுத்தினவர் இந்த டாக்டர்தாம்' என்று சொன்னால் அவனுக்கு, இந்த டாக்டரால் நமக்கும் நன்மை உண்டாகும்' என்று எண்ணம் வளரும். அவ்வாறு திருமாலை அறிமுகம் செய்து வைக்க எத்தனையோ அடையாளங்கள் இருக்க அவற்றையெல்லாம் சொல்லாமல், 'இவர் குரங்காட்டி; குரங்குகளைக் கொண்டு கடலை அடைத் தவர்' என்று சொல்கிறார். அதில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என்று ஆராய வேண்டும். அருணகிரிநாதர் சிறந்த கருத்து அல்லா மல் அப்படிச் சொல்வாரா? அவருடன் சென்றவன் குவியாத கரங்களையுடைய நோயாளி. கைகள் ஒரு விநாடிகூடக் கூடி அறியாதவன். அவனுக்கு அறி முகம் செய்து வைக்கும்போது அவனுக்கு ஏற்றபடியே சொல்ல வேண்டும். 'குரங்குகளினால் கடலை அடைத்தவர் அப்பா இவர் என்றால் வியப்பு ஏற்படும். குரங்குகளின் இயல்பு நமக்குத் தெரியும். அவற்றுக்குக் கையால் கட்டத் தெரியாது; பிரிக்கத் தெரியும். கை கூப்பத் தெரியாது; விரிக்கத் தெரியும். குரங்கின் இயல்பு குரங்கின் கை சும்மா இராது என்பார்கள். பூக்கட்டுகிற பண்டாரத்தின் கையும் சும்மா இராது. சிவாசாரியாரின் கையும் 2O3