பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் 'கவிகுலக்கோன் கொண்டுவரும் என்றிருக்கும்' இப்படி இராமனும், சுக்கிரீவனும் நினைக்கின்ற நினைப்புகளில் வேறுபாடு இருக்கிறது. காகுத்தன் சீதையை ஆஞ்சநேயன் கண்டு வருவான் என்று எண்ணுகிறான். கவிகுலக்கோனாகிய சுக்கிரீவன் சீதையைக் கொண்டு வருவான் என்று எண்ணுகிறான். இலங்கை செல்லும் ஆஞ்சநேயன் சீதை இருக்கும் இடத்தைப் பார்ப்பான். கற்புடைய அப்பெருமாட்டி ஆஞ்சநேயனுடன் வரமாட்டாள். ஆகவே, கண்டு அந்தச் செய்தியைச் சொல்வதற்கு அவன் வருவான் என்று இராமன் எண்ணுகிறான். சுக்கிரீவன் இராமனைப் போன்ற அறிவுச் சிறப்பு உடையவன் அல்ல. சீதையின் பெருமையையும் உணர்ந்தவன் அல்ல. அவன் கவி குலக்கோன், குரங்கு அரசன். எதையும் லபக்கென்று பற்றிக் கொண்டு எடுத்து வருவது குரங்குகளின் இயல்பு. ஆஞ்சநேயன் சீதாபிராட்டியை ஏதோ ஒரு பண்டத்தைத் தூக்கிக் கொண்டு வருவதுபோலக் கொண்டு வந்து விடுவான் என்று அவன் நினைக்கிறான். எதையும் பற்றித் தூக்கிக் கொண்டு வருவது குரங்கினுடைய இயல்பு. குரங்கு அரசன் குரங்குக்கு ஏற்ற வகையில் நினைக்கிறான். சீதாதேவி அதற்குச் சம்மதிப்பாளா என்று யோசிக்கவில்லை. கற்புடைய மங்கையை ஆஞ்சநேயன் எடுத்துவர முடியுமா என்பதையும் கருதவில்லை. அவன் குரங்காக இருந்ததன்றி, ஆஞ்சநேயனையும் குரங்கு இயல்பினின்றும் மாறினவனாக எண்ணவில்லை. ஆகையால், 'கவிகுலக்கோன் கொண்டுவரும் என்றிருக்கும்" என்று ஆஞ்சநேயன் நினைப்பதாகக் கம்பர் பாடுகிறார். குரங்குகள் அடைந்த மாற்றம் குரங்கினுடைய இயல்பு பிரித்துத் தூக்கிக் கொண்டு வரு கிறது என்பதற்கு இதைச் சொன்னேன். இராமனுடைய தொடர்பு பெற்ற பிறகு குரங்குகள் அற்புதமான மாற்றத்தை அடைந்தன. அவை இலங்கைக்குப் பாலம் கட்டின. அவை கட்டிய பாலம் எத்தகையது? கடல் நீரில் கட்டின. ஆழமான கடலுக்கு நீளமான பாலத்தைக் கட்டின. குரங்குகளிடத்தில் இருந்த அழிக்கும் சக்தி, பிரிக்கும் சக்தி, சிதற அடிக்கும் சக்தி இராமனுடைய தொடர் பினால் மாறிவிட்டது. 2C5