பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 குரங்குப் பிடி குரங்குகளிடத்தில் மற்றொரு சக்தியும் உண்டு. அதுதான் பிடிக்கிற சக்தி. குரங்குப்பிடி என்று சொல்வது உண்டு அல்லவா, குரங்கு பிடித்தால் லேசில் விடாது. குரங்குக்குப் பிரிக்கிறது எப்படி இயல்போ அப்படியே பிடிக்கிறதும் இயல்புதான். ஆனால் பிடிக்கும் இயல்பு மிகவும் அரிதாகவே காணப்படும். சமய நூல்களில் இறைவனைப் பற்றிக் கொள்ளும் திறத்தை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். ஒன்று மார்ஜால நியாயம். மற்றொன்று மர்க்கட நியாயம். பூனைபோலப் பற்றுவது ஒன்று. குரங்கு போலப் பற்றுவது மற்றொன்று. தாய்ப்பூனை குட்டிகளை வாயால் கெளவிக் கொண்டு செல்லும். பூனைக் குட்டிகளுக்கு ஒரு வேலையும் இல்லை. இறைவன் தன்னைச் சார்ந்தவர்கள் சிலருக்கு ஒரு வேலையுமின்றி அவர்களுடைய இன்ப துன்பங் களை எல்லாம் தானே தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றுகிறான். இது மார்ஜால நியாயமாகும். மார்ஜாலம் பூனை. குரங்குகள் இயல்பு வேறு. குரங்கு குட்டியைப் பற்றிக் கொள்ளாது. குட்டியே தாய்க் குரங்கின் வயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளும். பிடியை விட்டால் குரங்குக் குட்டி கீழே விழ வேண்டியதுதான். அப்படி இறைவனைக் குரங்குக் குட்டிகளைப் போலப் பற்றிக் கொள்ள வேண்டும். அவனைச் சரணாகதி அடைந்துவிட்டால்தான் நமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். இதுதான் மர்க்கட நியாயம் என்று சொல்வார்கள். மர்க்கடம் - குரங்கு. குரங்குகளிடத்தில் பிடிக்கிற தன்மை எப்போதும் காணப்படுவ தில்லை. இராமனோடு சம்பந்தப்பட்ட அளவில் குரங்குகளுக்கு உள்ள பிய்க்கிற தன்மையும் பிரிக்கிற தன்மையும் மாறி, பிடிக்கிற தன்மை மேல் ஓங்கியது. அதனால் பாலத்தைக் கட்டி முடிக்கின்ற ஆற்றலைப் பெற்றன. அழிக்கும் சக்தி மாறி ஆக்கும் சக்தி உண்டாயிற்று. உட்கருத்து இதன் கருத்தை நாம் உணரவேண்டும், இராமாயணத்தை ஏதோ ஒரு காலத்தில் நிகழ்ந்த கதை என்று நினைக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது பழையதாகப் போய் இருக்கும். நமக்கு շOՅ