பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் அதனால் பயன் இல்லை. உட்கருத்தினால் இராமாயணம் நமக்கும் பயன்படுவது. நம் மனம் ஒரு குரங்கு. பரமாத்மாவாகிய இராமனோடு சேர்ந்திருக்க வேண்டிய ஆத்மாவாகிய சீதை இராமனிடம் இருந்து பிரிந்து தனியே இருக்கிறான். சீதையாகிய ஆத்மாவைச் சிறை மீட்டால் பரமாத்வோடு போய்ச் சேருவாள். அவளைச் சிறை மீட்க வேண்டுமானால் மனம் ஆகிற குரங்குக்கு இறைவனுடைய தொடர்பு வேண்டும். எப்போதும் பிரிந்திருக் கிற மனம் என்னும் குரங்கை இராமன் தன்னுடைய அருளினால் ஆட்கொண்டான். பிரிக்கிற இயல்பு மாறிப் பிடிக்கிற இயல்பு வெளிப்பட்டது. இதுதான் பாலம் கட்டின கதையின் தத்துவம். 'கூடாமல் பிரிந்திருக்கும் உன் கை எம்பெருமான் முரு கனுடைய அருளைப் பெற குவிய வேண்டும். அப்படிக் குவி வதற்கு உதவி செய்வான் திருமால்' என்று உணர்த்துவாரைப் போல இங்கே அதற்கு ஏற்ற அடையாளத்தோடு திருமாலைக் காட்டுகிறார் அருணகிரியார். கவியால் கடல் அடைத்தோன் மருகோனை. 'குரங்குகளால் கடலை அடைத்தவன் ஆகிய இந்தப் பெருமானுடைய மாப்பிள்ளையை இனிமேல் உள்ளே போய்ப் பார்க்கலாம் வா' என்று தம்முடன் அழைத்துப் போகிறார். பாம்பு அணிந்தவன் கூடத்தில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் உடம்பு எல்லாம் பாம்புகள் தொங்குகின்றன. அந்தப் பாம்புகளைக் கண்டவுடன் வந்தவனுக்கு அச்சம் உண்டாகிறது. கண்ணை மூடிக்கொண்டு, அருணகிரிநாதருடைய கையை இறுகப் பிடித்துக் கொள்கிறான். சில பாம்புகளுக்குப் பல படங்கள் இருக்கின்றன. எல்லாமே படமெடுத்து ஆடுகின்றன. ஒரே படங்களின் கூட்டம். படத்தை எடுத்துக் கொண்டு சீறி வரும் பாம்பைப் பார்த்து யார்தாம் அஞ்சமாட்டார்கள்? பாம்புக்குச் கட்செவி என்று ஒரு பெயர். அதற்குக் காது இல்லை. கண்ணே அதற்குக் காதாகவும் உதவுகிறது. ஒளியையையும் ஒலியையும் ஏற்றுக் கொள்ளும் கண்ணே செவியாக இருக்கிறது. அந்தப் பாம்புகளை அங்கே அமர்ந்திருக்கிற பெருமான் ஆபரணம் ஆக அணிந்திருக்கிறார். வீட்டிற்குள் நுழையும்போதே அருணகிரியார் ஒரு குரங்காட்டியைக் 2O了