பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தில் புல்லாங்குழல் ஊதுவார். மாடுகள் காலார நடந்து மேய்ந்து கொண்டிருக்கும். அவர் தம் கையில் உள்ள புல்லாங்குழலை எடுத்துப் பஞ்சாட்சர மந்திரத்தை அதில் ஊதுவார். அவருடைய இன்னிசை காற்றில் பரவி அமுதம் புகுந்தது போல மக்கள் காதில் புகும். உயிர்க் கூட்டங்களின் காதில் புகுந்து அவற்றை வசம் ஆக்கும். அவர் மாடுகளை மேய்த்த காட்டில் பிறரை வருத்துகின்ற கொடிய விலங்குகள் இருந்தன. அவற்றால் துன்புறும் எளிய பிராணிகளும் இருந்தன. பாம்புகள் இருந்தன; பாம்பைக் கொத்தும் மயில்கள் இருந்தன. யானைகள் இருந்தன; யானை களை அடித்துக் கொல்லும் சிங்கங்களும் இருந்தன. மான்கள் இருந்தன; மான்களைத் தின்னும் புலிகளும் இருந்தன. ஆனாய நாயனார் புல்லாங்குழலில் இருந்து வெளிப்படும் அந்த அமுத கீதநாதத்தைக் கேட்டு அவை யாவும் தம்முடைய இயல்பு மாறி ஒன்றுபட்டு நின்றன என்று சேக்கிழார் பாடுகிறார். அந்த விலங்கினங்களின் காதும் கருத்தும் கானத்திலே ஒன்று பட்டதனால் அவற்றின் இயல்பான பகை உணர்ச்சி மாய்ந்து போயிற்றாம். 'நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் மலிவாய்வெள்ளெயிற்றரவம் மயின்மீது மருண்டுவிழும்.' வருத்துகின்ற வலியவர்களும், அவரால் துன்பத்தை அடை கின்ற எளியவர்களும் ஆனாயநாயனாரின் குழல் இசையைக் கேட்டு வேற்றுமை இல்லாமல் மனம் ஒருமைப் பட்டு லயித்து விட்டார்கள். அதனால் பாம்புகள் மயில்மீது மயங்கி விழுந்தன. 'சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன் சாரும்” கெடாத வலிமையுடைய சிங்கங்களும், பெரிய யானைகளும் பகையுணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும். 'புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்.' புல்லை வாயில் வைத்துக் கொண்டிருக்கும் மான் அதனை நுகராமல் அப்படியே மயங்கி நிற்கும். அதன் அருகில் வாயைத் திறந்து கொண்டிருக்கும் புலி அந்தக் கீத நாதத்தில் தன்னை மறந்து நிற்கும். மான் புலி வாயில் போகாமல் அதன் பக்கத்தில் 21C