பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பக்தி பண்ணி அன்பு செய்து, பக்தி முறுகிய நிலையில் உலகி லுள்ள எல்லாப் பொருளையும் ஆண்டவனாகவே கண்டார்கள். தங்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் நிலையையும் உணர்ந்தார்கள். நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றாலும், நமக்கு அதில் நம்பிக்கை இல்லை. இறைவன் நமக்குப் புறம்பாக இருக்கிறான் என்றால், "இருக்கலாம்' என்ற நம்பிக்கை ஓரளவு வருகிறது. கைலையங்கிரியில் இறைவன் இருக்கிறான் என்றனர் பெரியோர். அவன் சர்வ வியாபியாய் இருக்கிறான், அந்தர்யாமியாய் இருக் கிறான் என்றும் கூறினார்கள். “ສຄູລ ບໍ່ பொருளினூடும் அவன் இருக்கிறான். அவனுள் எல்லாப் பொருளும் அடங்கியிருக்கின்றன’’ என்றால் அது எப்படி என்ற ஐயம் உண்டாகிறது. 'இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய.' இது நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் வருகிறது. உலகிலுள்ள பலபல உருவங்களினூடே இறைவன் உறைந்து, "இயன்ற எல்லாம் பயின்று நிற்கிறான். இந்த நிலையை அந்தர்யாமித்துவம் என்பர். அதுமாத்திரம் அல்ல; 'அகத்து அடக்கி." அவற்றை எல்லாம் அவன் தனக்குள் அடக்கியிருக்கிறானாம். அந்த நிலை சர்வ வியாபக நிலை. இந்த இரண்டு நிலையும் எப்படி ஒருவனிடத்தில் அமையும்? ஒரு பெண் குடத்தைக் குளத்திற்குள் போடுகிறாள். குடம் முழுவதும் நீர் நிரம்புகிறது. குடம் நீருக்குள் இருப்பதனால் குடத்திற்குள்ளும் நீர் இருக்கிறது; அந்த நீர் குடத்தைத் தனக்குள்ளே அடக்கியும் இருக்கிறது. இறைவனும் அவ்வாறே இயன்ற எல்லா வற்றிலும் பயின்று உறைகிறான்; எல்லாவற்றையும் தன் அகத்தே அடக்கியும் வைத்திருக்கிறான். எம்பெருமானைச் சிவலோகத்தில் இருக்கும் நிலையிலும், வையம் முழுவதும் வியாபித்து இருக்கிற நிலையிலும், தன் அகத்தே உறையும் நிலையிலும் ஞானிகள் கண்டு ஆனந்தப் பட்டார்கள். 12