பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் பொருள் கொள்வது சிறப்பு. முருகன் வேலைக் கையில் தொட்ட மாத்திரத்தில் அதனுடைய எதிரொலியாக அச்சத்தால் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அசுரக் கூட்டத்தில் பெரிய ஆரவாரம் எழுந்தது என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பாகும். முருகப் பெருமான் போருக்கு வேலைத் தொட்டதைத் தேவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, சிவபெருமான் பார்த்தாரோ இல்லையோ, அல்லது எம் பெருமாட்டி பார்வதி பார்த்தாளோ இல்லையோ, வைத்த விழி வாங்காமல் முருகன் எங்கே போகி றான், என்ன செய்கிறான் என்று பார்த்து வந்த அசுரக்கூட்டங்கள் அவன் போர் வேலை எடுத்தவுடன் பார்த்து விட்டன. அது அசுரர்களுடைய உலகத்தில் எழும்பிய புலம்பல் ஒலியினால் நன்றாகத் தெரிகிறது. தவத்தினால் திறல் பெற்ற அசுரர்கள், படையினால் திறல் பெற்ற அசுரர்கள், உடம்பு வலிமையினால் திறல் பெற்ற அசுரர்கள் ஆகையால் திறல் அரக்கர் என்று சொல்கிறார் அருணகிரியார். அவர்களுடைய உலகத்தில் முருகன் போர்வேலைத் தொட்டவுடனேயே ஆர்ப்பு எழுந்தது. "ஐயோ! நம்முடைய வைரி வேலை எடுத்துவிட்டானே! நம்மை அழிக்கப் பிறந்த குழந்தை தன் சிறு கையிலே வேலைத் தொட்டுவிட்டானே! இனி நாம் உய்ய முடியாது போல் இருக்கிறதே!' என்ற புலம்பல் அசுரர் உலகத்தில் எழுந்துவிட்டது. திறல் அரக்கர் புவிஆர்ப் பெழத்தொட்ட போர்வேல் முருக்னை. முருகன் வேலைப் பிரயோகம் பண்ணவேண்டுமென்பது இல்லை. வேலை எடுத்த மாத்திரத்தில் அசுரர்களுடைய உலகத்தில் துன்ப ஆரவாரம் எழுந்தது. விளக்கைக் கொண்டு வரும்போது இருள் ஒடுவதைப் போல ஞானம் தோற்றும்போது அஞ்ஞானம் குலைந்துபோகும். அசுர சம்பத்துகளாகிய தீய குணங்கள் ஞானம் தோன்றும்போது நிலைகுலைந்து கெட்டுவிடும். அப்படி எம் பெருமான் வேலைத் தொட்ட வுடனேயே அசுரர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. பயனற்ற கை இப்படி அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தையே வேலாகக் கைப்பற்றிய எம்பெருமானைப் போற்றித் தொழாவிட்டால் 213