பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இரும்பும் பாலும் இரும்பைக் காய்ச்ச வேண்டுமென்றால் எரிந்து கொண் டிருக்கிற நெருப்பிலே அப்படியே தூக்கிப் போட்டு விடலாம். சிறிது நேரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்போடு இரும்பும் காய்ந்து தகதகவென ஒளி விடத் தொடங்கும். ஆனால் பாலைக் காய்ச்ச வேண்டுமானால் இரும்பைப் போட்டதுபோல அடுப்பிலே கொட்ட முடியாது. அப்படிக் கொட்டினால் பாலும் இராது, நெருப்பும் இராது. நெருப்பின் சூட்டை வாங்கி, அதனிடத்தில் சாரச் செய்கின்ற பாத்திரம் ஒன்று இடையில் வேண்டும். உடம்பும் அநுபவமும் அவ்வாறே உயிர் நேரே அநுபவத்தைப் பெறுவது இறை வனுடன் இணைந்து முத்தியாகிய இன்பம் பெறும்போது தான்; இரும்பு நேரே சூட்டைப் பெறுவது போன்றது அது. அப்படி யின்றி நல்வினை தீவினைகளின் பயனாகிய இன்ப் துன்ப அநுபவத்தைப் பெறும்போது பாலுக்கும் தீக்கும் இடையிலுள்ள பாத்திரத்தைப் போன்று ஒரு சரீரம் வேண்டும். உலக அநுபவங் களாகிய இன்ப துன்பங்கள் சரீர சம்பந்தமாகவே வரும். உலகில் வாழும் போது இந்தத் துல சரீரத்தின் சம்பந்தமாக அநுபவங்கள் வருகின்றன. உலகில் வாழ்ந்து, மரணம் அடைகிறவர்கள் நரகத் துன்பத்தையும், சொர்க்கலோக இன்பத்தையும் அநுபவிக்கிறார்கள். அந்த அநுபவம் எதைச் சார்ந்து வருகிறது? இந்த வெளி உடம்பு இல்லாவிட்டாலும் உள் உறையாக இருக்கிற சூட்சும சரீரத்தைச் சார்ந்து வருகிறது. இத்தகைய மூன்று வகையான சரீரங்களில் எதுவுமே இல்லை என்றால் உயிர் நேரே இறைவனோடு ஒன்றி எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறது. எனவே, உயிர் எப்போதும் தனித்து இராது. ஒன்று உடம்போடு ஒட்டி இருக்க வேண்டும்; அல்லது இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். உயிர் சரீரத்திற்கு உட்பட்டு இருப்பதே ஒரு வியப்புத் தரும் கட்டுப்பாடு. சரீரத்திற்குக் கட்டுப்பட்டு உயிர் இருக்கும் வரையில் பத்தன் என்றும், சரீரக் கட்டுப்பாட்டை விட்டபோது முத்தன் என்றும் சொல்வார்கள். கட்டுப்பட்டவன் பத்தன். விடுபட்டவன் 218