பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வேண்டாமா? ரேகையில் மடங்கும்படி ஆண்டவன் அமைத்திருக் கிறான். இப்படிப் பற்பல வகைகளில் ஆச்சரியப்படும்படியாக, இறைவனுடைய திருவருள், உயிர் வாழ்வதற்கு உரிய வீடான இந்த உடம்பைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஒரு வீட்டில் நாம் குடியிருக்கலாம். வீடு நமக்குச் சொந்தமானது அன்று. இருந்தாலும் நாம் அதில் வாழ்வதனாலே ஒட்டடை அடித்து வைத்துக் கொள்கிறோம். எங்காவது ஒழுகினால் ஒடு மாற்றிக் கொள்கிறோம். நம்முடைய வீடு அல்லவே, எதற்காக நாம் ஒடு மாற்றவேண்டும்? ஏன் ஒட்டடை அடித்துச் சுண்ணாம்பு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்? நாம் அதில் வாழ வேண்டியிருக்கிறதே! பூச்சி, பொட்டுகள் விழும்; மழை பெய் தால் ஒழுகும். நாம் அங்கே வசிப்பதனாலே நமக்குத்தான் அவற்றால் துன்பம். வீட்டினால் வருகின்ற பொருள் ஊதியம் வீட்டுக்காரனுக்கு என்றாலும், அதனால் வருகின்ற துன்பங்கள் அங்கே இருப்போரைச் சார்கின்றன. அங்கே இருக்கும் காலம் வரையில் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையதாகிறது. உடம்பைப் பேணுதல் அதுபோல உடம்பு நமக்குச் சொந்தமானது அல்ல என் றாலும், அதனால் வருகின்ற துன்பங்களைப் போக்கிக் கொண்டு அதை நன்றாக நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைத் திருமூலர் சொல்கிறார். முதலில், 'உடம்பு ஒரு மல பாண்டம். இழுக்குடையது. இதை எதற்காகப் பாதுகாக்க வேண்டும்?' என்றுதான் அவர் இருந்தாராம். பின்பு உடம்பினை நன்றாகப் பேணத் தொடங் கினார். எதற்காக? நன்றாகச் சதை வைக்க வேண்டும், ஊன் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக அன்று. உடம்புக்குள்ளே இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து கொண்டார். ஆண்ட வன் கோயிலாகிய இதை நன்றாகப் பாதுகாத்துக் கொள்வது முறையல்லவா? உடம்புக்குள்ளே உத்தமன் கோயில் கொண்டான் எனத் தெரிந்து கொண்டால், அவ்வுத்தமனைக் காண வேண்டு மென்று ஞானம் படைத்தவர்கள் உடம்பைப் பேணுவார்கள். ஆகவே, 22O