பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த வீடும் 'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே" என்று சொல்கிறார் அவர். நாமும் உடம்பைப் பாதுகாத்துக் கொள்கிறோம். யோகி களும் உடம்பை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். இருவர் செயலும் ஒன்றாகுமா? இரண்டு பேர் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தீட்டும் செயல் இரண்டு பேருக்கும் பொதுவானது. அதைப் பார்த்து, இரண்டு பேரும் கத்தி தீட்டுவது ஒரே காரணத்திற்காகத் தான் என்று சொல்ல இயலாது. இரண்டு பேரும் தீட்டிய கத்தியில் சுணை பார்க்கிறார்கள்; கூர் சரியாக ஏறியிருக்கிறதா என்று தொட்டுப் பார்க்கிறார்கள். தொட்டுப் பார்க்கும்போதே ஒருவன் கருத்தில், 'இந்தக் கத்தி சரியாக ஒரே வெட்டில் ஆட்டை வெட்டுமா?' என்கிற எண்ணம் இருக்கிறது. மற்றொரு வன் கருத்தில், "ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆலயத்தின் பிராகாரத்திலுள்ள முள்ளை இக்கத்தி சரியாக வெட்டுமா?’’ என்கிற கருத்து இருக்கிறது. கத்தியைத் தீட்டும் செய்கை ஒன்று தான். ஆனால் அச்செய்கைக்கு மூலகாரணமான எண்ணம் வேறு படுகிறது. அதனால் விளைகின்ற விளைவுகளும் வேறுபடுகின்றன. அப்படியே நாம் நம்முடைய உடம்பைப் பலவகையாலும் பேணும்போது உடம்பிலுள்ள இந்திரியங்களினால் வரும் இன்பத்தைக் கருத்தில் கொண்டு செய்கிறோம். ஞானிகளோ உடம்பினுள்ளே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, அவன் வாழ்கின்ற கோயிலாகிய வீட்டை நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தினால் ஒம்புகிறார்கள். இப்படிக் கருத்தில் வேற்றுமை இருப்பதனால் நாம் சாப்பிடுகிற சாப்பாட் டின் விளைவு வேறாகிறது. கண்ட கண்டபடி உணவுகளை உட்கொண்டு, நாம் உடம்பிலுள்ள இந்திரியங்கள் தருகிற இன்பத்தையே நுகர்ந்து அவை வன்மை இழந்த பிறகு வருந்திச் செத்துக் கொண்டிருக்கிறோம். மரணமில்லாப் பெருவாழ்வை 221