பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 விரும்பும் ஞானியர்கள் அதை அடைவதற்குரிய கருவியாகிய உடம்பைப் பலவகையாலும் ஆராய்ச்சி செய்து அதை நல்ல வகையில் ஒம்பி லட்சிய சித்தி பெறுகிறார்கள். கால எல்லை இந்த உடம்பாகிய கருவி நமக்கு எல்லாக் காலத்திலும் பயன்படுவதில்லை. இதற்குக் கால எல்லை உண்டு. அக்காலம் வரையில் உடம்பைப் பாதுகாக்க வேண்டியது இன்றியமை யாதது. எந்தக் காலத்தும் நாம் உடம்புக்கு அடிமை ஆகக் கூடாது. நமக்கு அடிமையாக இருக்க வேண்டிய அதனை, நமக்குத் தலைவனைப் போல மதித்து அதற்கு அடிமைப்பட்டு வாழ் கிறோம் நாம். உடம்பைக் கருவியாகக் கொண்டு, அதற்கு அடிமையாகாமல், அதை எந்தச் சமயத்திலும் உதறித் தள்ளும் நிலையில் வாழ்கிறார்கள் ஞானிகள். உடம்பாகிய இந்த வீட்டில் வாழும் நாம் உடம்பை விட்டு நீங்கினால் வேறு கட்டுப்பாடு இன்றி இறைவனுடைய திருத் தாளாகிய முத்தி இன்பம் ஒன்றையே பெறவேண்டும். அதுதான் நம் லட்சியம்; அப்படி இன்றி இந்த உடம்பை விட்டு வேறோர் உடம்பை எடுக்கும் நிலை வரக்கூடாது. நாம் இறந்து இறந்து பிறந்து கொண்டிருக்கிறோம். காரணம்: புற உடம்பு அழிகிறதே தவிர உயிருக்கு உட் சட்டையாக இருக்கிற சூட்சும காரண சரீரங்கள் அழிவில்லாமல் இருக்கின்றன. அவற்றை விட்டு உயிர் நீங்க வேண்டுமானால் அது சென்று சேருவதற்கு உரிய இறைவ னுடைய திருத்தாளைப் பெறும் முயற்சியைச் செய்ய வேண்டும். "ஆண்டவனே! இந்த உடம்பை விட்டால் இனி எனக்குப் பிறவி கூடாது. உன் திருத்தாளாகிய வீட்டை நான் பெற வேண்டும்' என்று சொல்ல வருகின்ற அருணகிரியார் இந்த உடம்பைப் பற்றி முதலில் சொல்கிறார். தெரு வீதியிலே படுத்து உறங்கும் ஏழையாக இருந்தாலும், மாட மாளிகையில் படுத்துக் களிக்கும் செல்வனாக இருந்தாலும் பிறக்கும்போது எவ்வித வேற்றுமையும் இல்லாமல் இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடிசையோடுதான் வருகிறார்கள். இந்தக் குடிசை நமக்குச் சொந்தமானது அல்லவே என்று அலட்சியம் செய்யவும் முடியாது. 222