பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கால் நாட்ட வேண்டும்? இந்த வீட்டுக்கு ஆதாரமாக இருப்பவை நாலாறு கால்கள். நாலு ஆறு என்பதற்கு இங்கே பத்து என்று பொருள்கொள்ள வேண்டும். பத்துக் கால்களின் மேல் இந்த விடு வைக்கப் பட்டிருக்கிறது. பிரயாணத்திலே போடுகின்ற கூடாரம் போன்றது இந்த வீடு. எப்போதும் இது நிலையானது அன்று. இந்த வீடு பத்துக் கால்களிலே சுமத்தி இருக்கிறது என்கிறார் அருணகிரியார். அவர் ஒரு புலவர். கொஞ்சம் நயமாகச் சொல்கிறார். கால் என்றால் தூண் என்றும் சொல்லலாம்; காற்று என்றும் சொல்லலாம். இந்த உடம்பாகிய வீட்டைத் தாங்குபவை பத்துக் கால்கள்; பத்து வாயுக்கள். மூச்சுப் போய்விட்டால் பிணம் என்று உடம்பு அழைக்கப் படுகிறது. வாழ்கின்ற மனிதனின் உடம்பைத்தான் உடம்பு என்று சொல்கிறோம். வாழ்கின்ற மனிதனின் உடம்பிலே பல வகை யான நாடி, நரம்புகள் இருக்கின்றன. 72 ஆயிரம் நாடிகள் இருக்கின்றன எனச் சொல்வர் ரத்த ஒட்டம் இருக்கிறது; கை காலை அசைக்கிறோம். இத்தனை செயல்களுக்கும் மூலமாக இருப்பது காற்று. அந்தக் காற்றைப் பத்து வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள். நமக்குப் பெரும்பாலும் ஐந்து காற்றுகள் தெரியும். அந்த ஐந்து மிகவும் முக்கியமானவை. மற்ற ஐந்து காற்றுகள் அவ்வளவு சிறப்பானவை அல்ல. இருந்தாலும் உடம்பின் இயக்கத்திற்குத் துணையாக இருப்பவை தச வாயுக்கள். நமக்கு நன்றாகத் தெரிந்த காற்று, பிராணவாயு. இருதயத்தை வீங்கி அமுங்கச் செய்கிற வாயு அது. உயிரைத் தரிக்க வைக்கிறதனால் அதற்குப் பிராண வாயு எனப் பெயர். உயிர்ப்பு என்று தமிழில் சுருக்கமாகச் சொல்வார்கள். அடுத்ததாக அபானன் என்னும் வாயுவும் நமக்குத் தெரியும். கீழே தள்ளுகிற சக்தி உடையது அது. மோட்டார் வண்டிக்குள் கரி போடுகிறார்கள். போடுகின்ற வாய் மேல் பக்கம் இருக்கும். கரி எரிந்து சாம்பலும், தூளுமாக விழுகின்ற இடம் கீழே இருக்கும். கரி போட்ட வழியாகவே சாம்பலைத் தள்ளமாட்டார்கள். போடுகின்ற இடம் வேறு; தள்ளு கின்ற இடம் வேறு. அப்படியே உடம்பில் உணவு போடுகின்ற 224