பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துக் கால்கள் உடம்புக்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆகவே, நாலாறு காலில் சுமத்தி என்கிறார் அருணகிரியார். மற்ற அமைப்புகள் நான்கு கால்களிலே நிற்கிற குடிசைகள், மாடுகள் போன்ற விலங்குகள். மனிதர்களுக்கு இரண்டு கால்களே உள்ளன. ஆகவே இந்தக் குடிசை இரு கால்களால் உயர்த்தி வைக்கப்பட்டிருக் கிறது. இரு காலால் எழுப்பி. இங்கே கால் என்பதற்குக் காற்று என்ற பொருள் இல்லை. முதலிலே காற்று என்ற பொருளில், 'நாலாறு காலில் சுமத்தி: என்றார். இங்கே பாதம் என்ற பொருளில், 'இரு காலால் எழுப்பி' என்கிறார். உடம்பாகிய குடிசை தோலால் சுவர் வைத்து, பத்துக் காற்றுகளை ஆதாரமாக வைத்து, அவற்றின் மேல் சுமத்தி, இரு கால் ஆகிய தூணில் நிற்கிறது. தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சுமத்திஇரு காலால் எழுப்பி. இரண்டு பக்கமும் சார்ப்பு இறக்குவதற்கு நடுவில் ஒரு விட்டம் வேண்டும் அல்லவா? அந்த விட்டம்போல இருப்பது முதுகு. அது வளையக்கூடிய சக்தி உடையது. வளைமுதுகை விட்டமாக வைத்து, இரண்டு பக்கமும் கையாகிய சட்டத்தை அமைத்திருக் கிறான் இறைவன். வளைமுதுகு ஒட்டிக்கை நாற்றி. வளைகின்ற முதுகை நடுவிட்டமாக அமைத்து, இரண்டு பக்கமும் கையாகிய சட்டத்தைத் தொங்கவிட்டிருக்கிற குடிசை இது. இந்தக் குடிசைக்கு மேற் கூரை வேய வேண்டும். கீற்றி னாலும் வைக்கோலினாலும் கூரை மேய்வார்கள். அப்போது பன நாரையோ கயிற்றையோ ஆக்கையாகக் கொண்டு கட்டுவார்கள். இந்த உடம்பாகிய வீட்டுக்குக் கூரை தசையினால் வேய்ந்திருக் கிறது. நரம்பாகிய ஆக்கையினால் கட்டப்பட்டிருக்கிறது. 226