பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த வீடும் நரம்பால் ஆர்க்கையிட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம். ஆர்க்கை என்பது கட்டுகின்ற கருவி. இந்தக் குடிசையாகிய உடம்பு நிலையானது அன்று. எத்தனை காலம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. சில குடிசைகள் ஆறு வருஷம் நிற்கும்; சில ஆறுமாதம் நிற்கும்; அறுபது வருஷம் நிற்கிற வீடுகளும் உண்டு. ஆறு நிமிஷம் இருக்கிற குடிசைதானே?" என்று ஆண்டவன் அலட்சியமாக அதை அமைக்கிறானோ? நூறு ஆண்டு வசிக்கப் போகிற உடம்பு என்பதற்காக நல்ல முறையில் அதைப் படைப்பதும், நூறுநாள் தாமே உலகில் வாழப்போகிறது என்பதற்காக மற்றோர் உடம்பை மட்டமாகப் படைப்பதும் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக, தோலால் சுவர் வைத்து, நாலாறு காலில் சுமத்தி, இரு காலால் எழுப்பி, வளை முதுகு ஒட்டிக் கைநாற்றி, நரம்பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டு வேய்ந்து, படைக்கிறான். நீண்ட காலம் உயிர் இதில் இருக்கவேண்டும் என்பது அவன் நோக்கம் அன்று. தன்னுடைய திருவடி நிழலில் இருப்பதற்குத் தகுதியில்லா வண்ணம் வினைகளாகிய மாசுகளைப் பூசிக் கொண்டிருக்கிறார்களே, உலகமாகிய ஆற்றிலே போய் வினை களைக் கழுவிக் கொண்டு வரட்டும் என்று உடம்பாகிய இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்து அனுப்புகிறான். சொந்த வீடு இது எவ்வளவுதான் அற்புதமான வீடாக இருந்தாலும் இதி லேயே இருந்துவிட முடியுமா? சென்று சேருகின்ற இடம் ஒன்று உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கலாமா? பல இடங்களில் குடியிருந்தவன் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கும் சமயம் ஒன்று வரும். 'வீட்டுக்காரன் வீட்டைச் செப்பஞ் செய்வது இல்லை; சுண்ணாம்பு அடிப்பது இல்லை. வீட்டிலே எங்கே பார்த்தாலும் ஒழுகுகிறது. பூச்சி பொட்டுகள் நெளிகின்றன, ஒண்டுக் குடித் தனக்காரர்களின் சண்டையும் அதிகமாகி விட்டது' என்ற நிலை வந்தால் அந்த வீட்டில் குடியிருக்க முடியாது. 'குடியிருந்து துன்பப்படும் நிலை நமக்கு வேண்டாம். சொந்தமாக வீடு கட்டிக் 227