பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தின்னும் அபிமானம் அன்று; ஒரு கட்டுப்பாட்டுக்குள் நின்று உடம்பைக் காப்பாற்றுவார்கள். குளிர் காய வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். நெருப் பிடம் நெருங்கினால் சுட்டுவிடும். அப்பால் அகன்றால் குளிர் காய முடியாது. அதை விட்டு அகலாமலும் அதனிடத்தில் மிகவும் நெருங்காமலும் நின்று குளிர் காய்வதை ஒப்ப, உடம்பை விடாமலும், உடம்பினால் வருகின்ற சுகத்தையே கருதி அதனிடம் நெருங்காமலும் இருப்பார்கள் ஞானிகள். உடம்பினுள் உயிர் வாழ்கின்ற காலம் வரையில் இறைவனுடய திருத்தாளைச் சென்று சேருவதற்கு உரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். 3 அவர்கள் உள்ளத்தில் லட்சியமாக இருப்பது இந்திரியசுகம் அல்ல. உயிராகிய மாணிக்கத்தைக் கொண்டு போய்ப் பெட்டியில் போட வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. அந்தப் பெட்டி தான் இறைவனுடைய திருத்தாளாகிய முத்தி வீடு. முத்தி வீடு இந்த வீட்டுக்குப் பலர் பலவிதமான அடையாளம் சொல்வ துண்டு. வெவ்வேறு திசையிலிருந்து பார்ப்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். 'இன்னார் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டால், 'மயிலாப்பூரில் இருக்கிறார் என்று ஒருவர் சொல்கிறார். 'மயிலாப்பூரில் மந்தைவெளியில் இருக்கிறார்' என்று ஒருவர் சொல்கிறார். குறிப்பாக வீடு இருக்கும் தெரு அவருக்குத் தெரிய வில்லை. அவர் இருக்கும் தெருப் பக்கமாகச் சென்றவர், 'மந்தைவெளியில் முதல் தெருவில் இருக்கிறார்' என்கிறார். அவர் அந்தத் தெருவுக்குள் போனது இல்லை. அதனால் அவருக்கு வீட்டு எண் தெரியவில்லை. தெருவழியாகப் போனவர் சொல் கிறார்; "மூன்றாம் எண்ணுடைய வீட்டில் இருக்கிறார். வீட்டு வாசலில் அவர் பெயர் இருக்கிறது. சக்தி விலாஸ் என்பது வீட்டின் பெயர் என்கிறார். வீட்டுக்குள் அவர் போனது இல்லை யாதலால் வீட்டுக்குள்ளே இருக்கும் அடையாளம் சொல்ல 23O