பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த விடும் தோலால் சுவர் வைத்து, நாலாறு காலில் சுமத்தி,இரு காலால் எழுப்பி, வளைமுதுகு ஒட்டிக்கைந் நாற்றி, நரம் பால்ஆர்க்கை இட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம்பிரிந்தால் வேலால் கிரிதுளைத் தோன்.இரு தாள்.அன்றி வேறு இல்லையே. (தோலைக் கொண்டு சுவர் வைத்து, பத்து வாயுக்களின் மேல் அமரச் செய்து, இரண்டு கால்களால் உயர்த்தி வைத்து, வளைந்த முதுகை நடுவே நீட்டி வைத்து, கைகளைத் தொங்கவிட்டு, நரம்பால் கட்டி, தசையைக் கொண்டு மூடிய இந்த உடம்பாகிய வீட்டை நாம் பிரிந்தால், வேலாயுதத்தால் கிரெளஞ்ச மலையைத் துளைத்த முருகனுடைய இரண்டு தாள்களாகிய முத்தியை அன்றி வேறு இன்பந் தரும் இடம் இல்லை. நாலாறு - நாலும் ஆறும்; உம்மைத் தொகை. காலில் - காற்றின் மேல். இரு கால் - இரண்டு கால்கள். ஒட்டி - நீட்டிவிட்டு, நாற்றி - தொங்கவிட்டு. ஆர்க்கை - கட்டும் கயிறு, கட்டுதல் எனலும் ஆம். அகம் - வீடு. வேறு - அகம்) அருணகிரிநாதர் அலங்காரத்தில் வேறு ஒரு பாட்டிலும் இந்த உடம்பைப் பற்றிச் சொல்கிறார். 'ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி அதில்இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே’ என்கிறார். அப்பர் சுவாமிகள், 'கால்கொடுத் திருகை ஏற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்புடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காடனாரே' என்று பாடுவதும் இங்கே நினைவுக்கு வருகிறது. 233