பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு அமைந்த வீடு இது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்தாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டியதுதான். இந்த வீடு நமக்குச் சொந்தம் என்ற நினைப்பு மக்களுக்கு இருந்தாலும் இது நமக்குச் சொந்தம் ஆகிவிடாது என்பது தெரியும். தினந்தோறும் மனிதர்கள் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இறந்து போனவனைப் பார்க்கும் போதும், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்கும் போதும் இந்த வீடு நெடுங்காலம் நிலைத்து இராது என்ற நினைவு தோன்றுகிறது. ஆனால் அந்த நினைவு உடனே மறைந்து விடுகிறது. இதைத்தான் மயான வைராக்கியம் என்று சொல்வார்கள். இந்தப் பூத வீட்டில் இருப்பதால் துன்பமே அன்றி இன்பம் இல்லை. துன்பம் தருகின்ற வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்வது எளிது. ஆனால் குடியிருக்க வேறு வீடு வேண்டுமே! மாற்றும் வீடு எப்போதும் வாடகை கொடுத்துக் கொண்டு ஒரு வீட்டில் ஒருவன் இருக்கிறான். அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றோ, வீட்டுக்காரனுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றோ வேறு வீடு மாற்றுகிறான். இப்படி வீடுகளை மாற்றிக் கொண்டிருப் பதனால் அவனுக்கு நிலையான வாழ்க்கை இருப்பது இல்லை. ஒரு வீட்டில் சற்று விரிந்த கொல்லைப்புறம் இருக்கும். அங்கே நல்ல செடி கொடிகளைப் போடலாம் என்று சிறு தோட்டத்தை அமைப்பான். ஒர் ஆண்டு ஆன பிறகு அந்தச் செடிகொடிகள் நல்ல பயன் தரும் போது வீட்டுக்காரன் நோட்டிஸ் கொடுத்து விடுவான். அந்தக் கொடிகளையும், செடி களையும் அப்படியே பிடுங்கிக் கொண்டு போக முடியுமா? அந்த மாதிரியே எவ்வளவோ பேர்கள் தம்முடைய வாழ்க்கை யில் பல பல கோட்டைகளைக் கட்டுகிறார்கள். அவர் களுடைய முயற்சிகள் பயன் தரும்போது இறந்து போகிறார்கள். நல்ல புதல்வனைப் பெற்று அவனுக்குக் கல்வி கற்பித்து அவன் உத்தி யோகம் பண்ணும்போது தான் சுகமாக ஒய்வு பெற்று இருக்க வேண்டுமென்று கருகிறான் ஒருவன். குழந்தை பிறந்து தளர் நடை இடும்போதே அவன் இறந்து விடுகிறான். ஒருவன் ஒரு 243