பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒரு பாட்டில், இந்த வீட்டைக் கட்டி நான் குடியிருப்பதற்காக நீ கொடுத்திருந்தாலும் இந்த வீடு எனக்குச் சொந்தமாகாமல் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பகைவர்களுக்குச் சொந்தமாக இருக் கிறதே என்பதைத் தெரிவித்திருக்கிறார். - "ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஒட்டி, அதில் இரண்டு கைவைத்த வீடு' என்று சொல்கிறார். இப்படி ஐந்து பொறிகளின் வயப்பட்டு மனம் செல்ல, அதன் வழிப்பட்டு நம்முடைய வாழ்வு அமைகிறது. ஐந்து பேர் களுக்கு நடுவில் வாழ்கின்ற வாழ்வு எப்போதும் துன்பந்தான். 'எலி வளையானாலும் தனி வளை வேண்டும்' என்பது ஒரு பழமொழி. தனியாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்ற தாபம் எந்தக் குழந்தைக்கு இருக்கிறதோ அந்தக் குழந்தையின் ஆவலைப் போக்குவதற்கு எம்பெருமான் கருணை புரிவான். இந்தச் செய்திகளை எல்லாம் நினைந்து தம்முடைய அநுபவத்தை அருணகிரியார் சொல்கிறார். அந்த வீடு 'எங்கள் பெருமானாகிய முருகன் நான் பூதம் தங்கிய வீட்டில் குடியிருப்பதை அறிந்து கருணை செய்தான். அந்த வீட்டில் நான் இருக்கிறேனே என்று பல காலம் வருந்தினேன். அந்த வாழ்க்கையில் பெறுகின்ற துன்பம் மேன்மேலும் என்னை உறுத்தியது. அதனால் நைந்து அந்த வாழ்க்கையை மாற்றுவதற்கு எண்ணினேன். எம்பெருமானும், என்னுடைய கருணைத் தந்தையும் ஆகிய ஆண்டவனிடத்தில் முறையிட்டுக் கொண்டேன். அந்தப் பெருமான் என்னுடைய வேண்டுகோளைச் செவிமடுத்து, 'நீ இந்தப் பூதவீட்டில் இருக்க வேண்டாம். ஒருவரும் அறியாத தனிவீட்டில் இருப்பாயாக. அங்கே சுகமாகத் தங்குவாயாக. எப்போதும் சளசளவென்று பேசுகின்ற இந்த வாழ்வைப் போல இராமல் ஒரு பேச்சும் இன்றி ஒரு சிந்தனையும் இன்றிச் சுகமாகத் தூங்கு என்று சொன்னான்-இப்படி அருணகிரியார் தெரிவிக்கிறார். ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூத வீட்டில் இராமல் என்றான். 246