பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு ஒரு பூதரும் அறியா வீடு, தனி வீடு அது. அந்த வீட்டில் ஒரு பூதமும் அறியாமல் தனியாக நான் இருக்கும்படி, உரை அற்று, உணர்வு அற்று இருக்கும்படியாகச் செய்தான். இழிந்த வீட்டை மாற்றி உயர்ந்த திருமாளிகையில் என்னை வைத்தான் என்று அலங்காரமாக அருணகிரியார் சொல்கிறார். அதன் கருத்து, பெளதிகமான சரீரத்தை விட்டு என்றும் மாறாத இன்பத்தைத் தருகின்ற முத்தி வீட்டை எனக்குக் கொடுத்தான் என்பதே. இந்த உடம்பைப் பூத வீடு என்று சுட்டினார். ஐந்து பூதங்களால் அமைந்தது ஆகையால் இது பூத வீடு ஆயிற்று. இனி முத்தியைப் பற்றி, "ஒரு பூதரும் அறியா வீடு; தனி வீடு; உரையற்ற வீடு; உணர்வற்ற வீடு' என்று தெரிந்து கொள்ளும்படி பாட்டில் சொல்கிறார். யூதர் என்பது மனிதருக்குப் பெயர். உலகிலுள்ள மக்கள் யாரும் முத்தி இன்பத்தை உணர இயலாது. அவ்வின்பத்தில் கூட்டம் இல்லை. எல்லாம் ஒன்றாக இணைந்து இருக்கிற இடம் அது. இறைவன், ஆத்மா என்ற பிரிவுகூடத் தோற்றாமல் அத்து வித நிலையில், "நீ வேறு எனாது இருக்க, நான் வேறு எனாது இருக்க' என்றபடி இணைந்து குலவும் வீடு அது. உடல், உரை, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் தாண்டி அமைந்த இடம் அது. இந்த வீடு உடம்பு. இதனை விட்டு விடுகிறோம். அந்த வீட்டில் உரையும் நினைவும் இல்லை. மனத்திற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்ட இடம் ஆகையால் அது உரையும் உணர்வும் அற்ற இடம். பல பேச்சுக்களைப் பேசுவதனால் துன்புற்றுப் பலவகை யான கவலைகளினால் வாடி வதங்கி இன்னல் உறுகின்ற ஒருவரைப் பேச்சு இல்லாது, கவலைக்கு இடம் இல்லாது, கூட்டமே இல்லாது யாரும் வரமுடியாத தனியான சுதந்தர வீட்டில் வைத்துக் காப்பாற்றியது போன்ற ஒரு சித்திரத்தை அருணகிரிநாதர் தீட்டுகிறார். 2 இனி இப்படித் தந்த பெருமான் யார் என்பதை விரிவாகச் சொல்கிறார். முருகப் பெருமானுடைய புகழ் அங்கே வருகிறது. அவன் சிவபெருமானுடைய குருநாதன், வேலாயுதன்; சூரனை அழித்தவன் என்று மூன்று நிலையைச் சொல்கிறார். 6.Qāst.III–17 24了