பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வகையில் முயற்சி செய்யப் பலபல வழிகள் நம்முடைய சமயத்தில் இருக்கின்றன. அவரவர்களுடைய மனப்பக்குவத் திற்கு ஏற்பக் கோயில் சென்று இறைவனைக் கும்பிடுவாரும் உண்டு; தம் வீட்டில் அவனது வடிவத்திற்கு மலரிட்டு அருச்சித்து வழிபடுவாரும் உண்டு; யோக மார்க்கத்திலே அவன் தியானத்தில் ஈடுபட்டிருப்பாரும் உண்டு; வீடு வாசலைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து, சந்நியாச ஆசிரமத்தைப் பின்பற்றித் தவநெறி யில் நிற்பாரும் உண்டு. சந்நியாசம் பெறுவது ஒன்றே இறைவனை அடைய மார்க்கம் என்றிருக்குமானால் இல்லறத்தானுக்கு வழியே இல்லாமல் போகும் அல்லவா? ஆகவே இல்லறத்தானுக்கு அறம் செய்து அடியார்க்கு அமுதிட்டுத் தொண்டு செய்வதன் மூலம் இறைவனுடைய அருளைப் பெறலாம் எனவும் வகுத்திருக்கிறார்கள். எந்த வேலையைச் செய்தாலும் எல்லாத் தொழிலாளர் களுக்கும் கடைசியில் கூலியாகக் கிடைப்பது பணம். அதுபோல எந்த எந்த நெறியில் சென்றாலும் கடைசியில் பக்தர்களுக்குக் கிடைப்பது இறைவனுடைய அருள்தான். அந்த அருளைப் பெறுவதற்கான வழிகள் பலவாக இருப்பதனால் அவை ஒன்றோ டொன்று முரண்பட்டது ஆகுமா? அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த பண்டங்களை உண்டாலும், உண்போர்களுக்கு முடிவில் கிடைக்கும் பயன் என்ன? பசி அடங்குகிறது. ஓர் ஊருக்குப் போகப் பல வழிகள் இருக்கின்றன என்றாலும் போய்ச் சேருகிற இடம் ஒன்றாக இருப்பது போல, இறைவன் அருளைப் பெறு வதற்காக மார்க்கங்கள் பல இருப்பினும் முடிவில் அவை யாவும் போய்ச் சேருகின்ற இடம், முடிவாகப் பெறுகின்ற பயன், ஒன்று தான். பல வழிகள் ஒர் ஊருக்குப் போக இருப்பது அவ்வூரின் சிறப்பை அதிகப்படுத்துமே அன்றிக் குறைக்குமா? நமது சமய நெறியில் பல வழிகள் இருப்பது இதற்குச் சிறப்புத்தான். அருள் நெறியிலே சாதனம் செய்யப் புகுகின்றவர்கள் படிப்படியாக மூன்று நிலையிலும் நின்று இறைவனை வழிபட்டு அநுபவப் பேற்றை எய்துகிறார்கள். உருவமும் நாமமும் ரோடிலே ஒருவன் கார் ஒட்டிப் போகிறான். நாற்சந்தியில் இருக்கிற போலீஸ்காரன் கையை நீட்டிக் காட்டுகிறான். அவன் 土6