பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நிட்டுரம் - கொடுமை. நல்லவர்களுக்குக் கொடுமை செய்வதையே தன்னுடைய தொழிலாகப் படைத்த சூரன் என்னும் தலைவனையும், அவனுடன் சேர்ந்த சுற்றத்தார்களையும் அடியோடு அழித்தவன் முருகன்; சூர குலத்திற்கு அந்தகன் ஆகு நின்றவன். சிவபெருமான் புராந்தகன். இவன் சூர குலாந்தகன், முன்னாலே ஐந்து பேர்களாலே நான் வாடுகிறேன் என்று சொன்ன இடத்தும் எம்பெருமான் நிட்டுர சூரனுக்கு அழிவு செய்தவன் என்று சொன்னார். 'ஒரஒ ட் டார்ஒன்றை உன்னஒட் டார்மலர் இட்டுஉனதாள் சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்? சென்று தேவர்உய்யச் சோரநிட் டுரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட்டு ஓர்இமைப் போதினில் கொன்றவனே." சூரனும் அவன் சுற்றத்தார்களும் அகங்காரத்திற்கும் மமகாரத் திற்கும் அறிகுறிகள். அசுரர்கள் அஞ்ஞானத்தின் வகையாகிய பல குணங்களுக்கு அடையாளம். அத்தகைய இழி குணங்களை அசுர சம்பத்து என்று கூறுவார்கள். அவற்றை எல்லாம் முருகப் பெருமான் அழித்தான்; ஞானத்தினால் அழித்தான். அவன் ஞான ஆக்கத்தையும் அஞ்ஞான நீக்கத்தையும் தருகிறவன் என்பதை வேலவன், நிட்டுர சூரகுலாந்தகன் என்ற இரண்டு பெயர்களால் தெரிவித்தார். 'முருகப் பெருமான் சிறந்த ஞானாசிரியன்; அஞ்ஞானத்தைப் போக்குபவன். அவனிடததில் வந்து உபதேசம் பெற்ற மாணாக் கனோஆணவத்தை நீக்குபவன், மும்மலத்தை அழிப்பவன். இப்படிப் பெரிய மாணாக்கனைப் பெற்ற பெரிய குரு என்னிடத்தில் பெருங்கருணை உடையவனாக வந்து, பூதம் நிரம்பிய வீட்டில் நீ இராமல் தனி வீட்டில் சுகமாக இரு' என்று சொன்னான்' என்று தாம் பெற்ற பேற்றை வியப்புணர்ச்சியுடன் பேசுகின்றார் அருணகிரியார். 女 ஒருபூ தரும்அறி யாத்தனி வீட்டில் உரைஉணர்வற்று இருபூத வீட்டில் இராமல்என் றான்,இரு கோட்டு.ஒருகைப் 254