பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு பொருபூ தரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன், நிட்ரே சூர குலாந்தகனே. (இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உடைய போரிடும் மலைபோன்ற கயாசுரனாகிய யானையை உரித்து அதன் தோலை மேற் பார்வையாக அணிந்து கொண்டவனும் திரிபுரத்தை அழித்தவனுமாகிய சிவபெருமானுக்குக் குருவடிவாக வந்தவனாகிய வேற்கைப் பெருமானும், கொடுமை புரியும் சூரனது குலமுழுவதற்கும் காலனாக நின்று அழித்தவனுமாகிய முருகன், "நீ இந்த ஐம்பூதங்களால் அமைந்த வீட்டில் இராமல், ஒரு மனிதரும் அறியாத தனி வீட்டில் வாக்கின் செயலாகிய உரையும் மனத்தின் செயலாகிய உணர்வும் அற்று இருப்பாயாக’ என்று அருள் செய்தான். யூதர் - மனிதர். தனிவீடு - தனக்கு இணையற்ற முத்தி. பூத வீட்டில் - ஐம்பூதங்களின் பரிணாமமாக உள்ள உடம்பில். கோடு - கொம்பு. பூதரம் - மலை; இங்கே முன் உள்ள அடைகளால் யானையைக் குறித்தது. ஏகாசம் - போர்வை. புராந்தகன் - புரத்துக்கு யமனைப் போன்றவன். குருபூதம் - குருவடிவையுடைய. நிட்டுரம் - கொடுமை புரியும். 255