பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தான். பசுத்தோல் போர்த்த புலியும் அன்று. ஆனால் அருகில் போனால் துன்புறுத்தும். ஆகையால் பசுவாக அது தோற்றம் கொண்டிருந்தாலும் அதைப் புலி என்று சொல்கிறார்கள். ஒரு வீட்டில் நாய் இருக்கிறது. அதன் பக்கத்தில் போக அஞ்சுகிறோம்.அந்த வீட்டுக்காரர் அதைப் பசு என்று சொல் கிறார். நாயின் உருவம் இருந்தாலும் கடிக்கும் என்று அஞ்சுகிற மனிதனுக்கு அது பசுமாட்டைப் போலச் சாதுவாக இருக்கும் என்று காட்டவே அதனைப் பசு என்று சொல்கிறார். அது போலவே மனம் மனமாக இருக்கும் நிலை ஒன்று; திருவருள் இனமாக இருக்கும் நிலை ஒன்று. மனம் மாயையின் குஞ்சாக, மனமாக இருந்தால் நம்மை மீட்டும் பிறவிக்கு ஆளாக்கும். அது திருவருள் இனமாக இருந்து இறைவனை எழுந் தருளச் செய்யும் பீடமாக அமைந்தால் நம்முடைய பிறவியைப் போக்கத் துணையாக நிற்கும். ஐந்து தலை நாகம் நஞ்சைக் கக்குவதாக இருந்தால் துன்பத்தைத் தரும். அப்படிக் கக்காமல் இறுகிய மாணிக்கம் உடையதாய் இருந்தால் அதன்மேல் ரங்க நாதனைப் போலப் படுக்கலாம். மனம் ஞானத்திற்குரிய ஏணியாக இருக்குமானால் அத்தகைய மனம் வேண்டும். அத்தகைய மனம் கிடைப்பது அரிது. மாயை உலகம் எங்கும் பரவி இருப்பினும் நம்மிடத்தில் மனத்தின் உருவாக இருக்கிறது. ஒரு பெண் தன் கணவனைத் தன் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு அவள் செய்யும் அதிகாரத்தைக் கேட்க வேண்டாம். அதுவும் அவளுடைய பிறந்தகம் பணக்கார வீடாக இருந்துவிட்டால் அவளுக்குத் தலைகால் தெரியாது. அவளுடைய கணவன் மாமியாருக்கு அடிமை, மாமனாருக்கு அடிமை; அந்த வீட்டிலுள்ள எல்லோருக்கும் அடிமையாகி விடுகிறான். அங்கே வேலைக்காரனாக வாழ்கிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன? மாமியாருக்கும் மாமனாருக்கும் அவன் அடிமையாக இருப்பதற்கு அவர்களிடத்தில் உண்டான நேர்த் தொடர்பு காரணம் அன்று. அவன் மனைவிக்கு முதலில் அடிமையாக இருக்கிறான். அதனால் மாமனார் மாமியாருக்கு அடிமை ஆகிறான். அப்படியே மனத்திற்கு 258