பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் காட்டும் குறிப்பை உணர்ந்து கார் செலுத்திப் போகிறவர்கள் பத்திரமாகப் போகிறார்கள். 'வேறு ஒரு வண்டி போகிறது; சற்று நில்' என உணர்த்தக் குறிப்பாகக் கையைக் காட்டும்போது அதை உணராமல் காரை ஒட்டிக்கொண்டு ஒருவன் போனால் அந்தக் காரோடு மோதி உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ள நேரும். சமய நெறியிலே செல்பவர்களுக்குக் குறிப்பாக வழியை உணர்த்தும் அடையாளங்களாகக் கோயில்களும், விக்கிரகங்களும், நாமங்களும் அமைகின்றன. அவற்றை உணர்ந்து தெளிந்து சென்றால் நம் முயற்சியின் முற்றிய பயனாக அருளைப் பெற முடியும். நம்பிக்கை உணவு சாப்பிட்டால் பசி தீரும் என்றால் யாராவது நம்ப மாட்டேன் என்று சொல்வார்களா? பிறந்து பிறந்து துன்புற்றுக் கடைசியில் இறக்கின்ற ஆருயிர்களின் துன்பம் இறைவனை நம்பி வழிபட்டு அவன் அருள் கிடைத்த மாத்திரத்தில் ஒழியும் என்று அநுபவம் பெற்றவர்கள் சொன்னால் அதை நம்ப மாட்டோம் என்று சொல்கிறோம். 'இறைவனை நம்புகிறோம்" எனச் சொல்பவர்களும்கூட எப்படி நம்புகிறார்கள்? 'கடன் தருகிறேன் என்று சொல்பவர்களை நம்புவது போல, "வேலை வாங்கித் தருகிறேன்' என்று சொல்பவர்களை நம்புவது போல நம்புகிறார்களே தவிர, ஒரு குழந்தை தன் தாயை நம்புவது போல நம்புவதில்லை. அடித்தாலும் 'அம்மா' என்று அழுதுகொண்டு தன் தாயினிடம் ஒடுகிறது குழந்தை. அப்பா தின்பண்டம் வாங்கி வந்தாலும் அதை வாங்கிக்கொண்டு, 'அம்மா' என்றுதான் ஒடுகிறது. அடிக்கும்போது, "சீ நீ என் அம்மா அல்ல' எனச் சொல்லிவிட்டு எந்தக் குழந்தையாவது வீட்டை விட்டு ஓடுகிறதா? அப்படி ஓடினால் அந்தத் தாய் அக்குழந்தையைத் தன்னுடையது என்பாளா? குழந்தை தன் தாயை நம்புவது போலப் பக்தன் இறைவனை நம்பினால் அவன் அருள் செய்வான். திரெளபதியின் கதை கொடுங்கோலன் துரியோதனன் சபையில் வீற்றிருந்தான். கெளரவர்கள் கொம்மாளமிட்டுக்கொண்டு அம்மண்டபத்தில் கூடியிருந்தார்கள். ஞானிகளும், மோனிகளும் அமர்ந்திருந்தார்கள். 17