பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு தாய் அதை எடுத்து உள்ளே போடுவதற்கு முயலும் போது சின்னஞ்சிறு குழந்தை, 'நானும் தூக்குகிறேன்' என்று சேர்ந்து கொள்கிறது. குழந்தையினுடைய முயற்சியால் மூட்டை உள்ளே வந்துவிடவில்லை என்று தாய்க்குத் தெரியும். ஆனால், "என் குழந்தை இந்த மூட்டையை உள்ளே போட்டது' என்று சொல்லிக் கிளுகிளுப்பை அடைகிறாள். அந்த மூட்டையை அது தூக்கவில்லையானாலும் தூக்குவதற்கு முயன்றதே, அதைக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அப்படியே இறைவனிடத்தில் நமக்கு அன்பு உதயமானால் போதும்; அதற்கு மகிழ்ந்து அவன் அருளை நமக்கு வழங்கத் தொடங்குகிறான். தன்னை நினைப்பதற்கு வேண்டிய கருவி களை எல்லாம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறான். தனு கரண புவன போகங்களைக் கொடுத்து, அவற்றைக் கருவியாக வைத்துக் கொண்டு தன் பேரருளைப் பெறுவதற்கு முயல்வார்கள் என்று அவன் எதிர்பார்க்கிறான். முயற்சி இல்லாமல் கொடுத் தால் கொடுக்கும் பொருளுக்கும் பயன் இராது; மதிப்பும் இராது. முயற்சி செய்வதனால் பெறுகின்ற பொருளுக்குப் பயன் உண்டு என்பதை அறிந்தே அவன் மக்களின் முயற்சியை எதிர்பார்க் கிறான். அந்த முயற்சியும் அவன் அருளுகிற பயனும் அளவி னால் ஒத்திருக்கும் என்று சொல்ல இயலாது. அவன் சிறு முயற்சிக்குப் பன்மடங்கு நன்மையை அருளுகிறான். இறைவன் பெருங்கருணை 'நாம் இறைவனைப் பூசை செய்கிறோம்; சகசிரநாம அருச்சனை செய்கிறோம். அதனால்தான் இத்தனை நன்மை கொடுத்திருக்கிறான் என்று எண்ணுவது தவறு. 'ஒரு ரூபாய் கொடுத்தோம்; ஒரு வீசை மாவு தந்தார்' என்று செட்டியாரைப் பற்றிச் சொல்வது போன்றது அது. நாம் செய்த காரியத்திற்கு ஏற்ற கூலிதான் கிடைக்கிறது என்றால், நாம் செய்யும் தப்பான காரியங்களுக்கும் உரிய கூலியை எதிர்பார்க்கவேண்டும். நாம் செய்த நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம். நாம் எத்தனையோ பேரை உதைத்திருப்போம். எத்தனையோ அன்பர் களை வைதிருப்போம். எத்தனையோ பெரியவர்களுக்குத் தவறு க.சொ.111-18 263