பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நினைத்திருப்போம். அப்படிச் செய்த தீங்குக்கு இறைவன் கூலி கொடுக்க வேண்டுமானால் உதைத்த கால் முடமாக வேண்டும். வைத வாய் ஊமையாக வேண்டும். பலவிதமாகப் பெரியவர் களை எண்ணிய மனம் பைத்தியமாகி இருக்க வேண்டும். ஆனால் இறைவன் அப்படிப் பண்ணவில்லை. அவனுக்கு நம்மிடத்தில் உள்ள பெருங்கருணை அத்தகையது. அவனை நாம் சிறிதளவு நினைத்தால் போதும். நம்மை நினைத்தானே என்று மகிழ்ச்சி அடைவா. நாம் அவனுடைய அருளைப் பெறவேண்டுமென்று ஒர் அடி நடந்தால் அவன் பத்து அடி எதிர்கொண்டு அழைக்க வருகிறான். 'திருச்செந்தூரை நினைந்து வணங்கினால் புண்ணியம்; அந்தத் திசையில் திரும்பி னால் புண்ணியம்' என்று புராணங்கள் சொல்கின்றன. ஆண்ட வனுடைய பெருங்கருணையைப் புலப்படுத்துவதற்கு அப்படிச் சொல்வது ஒரு முறை. "என் பெயரைச் சொன்னால் போதும்; உடனே எல்லாம் செய்து கொடுப்பான்' என்று நாம் சொல் வதில்லையா? நக்கீரர் சொல்வது கருணை உள்ளவர்கள் முயற்சியின் தொடக்கத்திலேயே அதைப் பாராட்டுவார்கள். மிக்க முயற்சி செய்த பிறகு அவனுக்கு ஊக்கம் அளிக்கலாம் என்று காத்திருக்க மாட்டார்கள். திருமுரு காற்றுப்படையில் நக்கீரர் ஒரு புலவனுக்கு முருகனை அடைய வழி காட்டுவது போலப் பாடி இருக்கிறார். முருகன் எங்கே இருக்கிறான் என்று புலவன் கேட்ட கேள்விக்கு விடை சொல்லும் முறையில் பாட்டு அமைந்து இருக்கிறது. 'நான் முருகனைப் பார்க்க வேண்டும்' என்று சொன்ன மாத்திரத்தில் வழிகாட்டும் புலவருக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. 'அப்பா, நீ உடனே அவனைக் காண்பாய். ஊரை விட்டு, வீட்டை விட்டு அவனைக் காண வேண்டும் என்று நீ புறப்பட்டுவிட்டாயே. அதுவே பெரிய காரியம். எதை எதையோ ஆதாரமாகக் கருதி ஊன விளையாட்டை ஆடிக் கொண்டிருந்த நீ இறைவனைக் காணவேண்டுமென்று நேர் எதிர்த்திசையில் திரும்பினாயே; பெரிய காரியம். ஆண்டவன் திருவருள் உனக்குக் கிடைக்கும். 264