பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நிலை மாற வேண்டுமானால் இருள் இல்லாத மனத்தின் குறும்பு இல்லாத ஒர் இடத்தில் விளையாட வேண்டும். அது ஞான விளையாடல் புரியும் இடம். அந்த விளையாட்டை மனம் விளை யாடத் தொடங்கினால் இறைவனுடைய திருவருள் பெறும் நிலை வந்து விடும். அந்த நிலை இரண்டறக் கலக்கும் அத்துவித நிலை. அருணகிரியார் வேண்டுகோள் 'முருகா நான் ஞான விளையாட்டு விளையாட வேண்டுமே. மாயா விநோத மனோ துக்கத்தில் ஆழ்ந்திருக் கிறேனே! இந்த மாயை விளையாட்டிலே இருக்கும் எனக்கு ஞான விளை யாட்டை விளையாடும் நெறியை நீதான் காட்ட வேண்டும். ஏனென்றால் நீயே ஞான உருவம் ஆக இருக்கின்றவன்' என்று விண்ணப்பித்துக் கொள்கிறார் அருணகிரிநாதர். நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்? 'இப்போது ஞான விளையாட்டு என்னிடம் இல்லை. ஞானம் உன்னுடைய திருவருளால் வரவேண்டும். நீ அந்த ஞானத்தை ஊட்டினால் அன்றி என்பால் ஞான விளையாட்டு வராது. இப்போது அந்த விளையாட்டு இல்லை என்பது என்னுடைய அவல நிலையால் நன்கு தெரிகிறது. அந்த விளையாட்டு நிலை உன்னால்தான் வரவேண்டும். ஆகவே அதனை நீ அருள் புரிவாயாக’ என்று வேண்டுகிறார். இன்று நாம் இருக்கின்ற நிலை மாயா விநோத மனோதுக்க நிலை. இது மாய்ந்து போனால் நமக்கு இன்பம் உண்டாகும். இது மாய்வதற்கு ஞான விநோதமாகிய மருந்து வேண்டும். காமமும் துவட்சியும் ஒருவனுக்கு நோய் வருகிறது. நோய் உடையவன் டாக்ட ரிடத்தில் போனால், அவர், 'என்ன செய்கிறது? என்று கேட்கிறார். அவனுக்கு எத்தனையோ நோய்கள் இருந்தாலும் எது மிகுதியாக இருக்கிறதோ அதைத்தான் சொல்வான். ஒருவனுக்கு வயிற்று வலி. அதோடு கண் எரிகிறது. கால் குடைச்சல் 263