பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு ஏற்படுகிறது. இவ்வளவு இருந்தும் வயிற்றுவலிதான் பொறுக்க முடியாமல் மிகுதியாக இருக்கிறது. டாக்டர் என்ன பண்ணுகிறது என்று கேட்டவுடன், "ஐயோ! வயிற்று வலி தாங்கமுடிய வில்லை' என்று முதலில் சொல்வான். டாக்டர் விசாரித்தால் ஒவ்வொன்றாக மற்றச் சிறு வியாதிகளைச் சொல்வான். டாக்டர் கேளாமலேயே முதலில் அவன் சொல்வது வயிற்று வலியைத் தான். காரணம்: அவனிடத்தில் உள்ள நோய்களுக்குள் அதுதான் மிக்க துன்பத்தைத் தருவது. 'மாயா விநோத மனோ துக்கம் என்று சொல்கிறாயே! அந்த நோய் உனக்கு என்ன துன்பத்தைத் தருகிறது?’ என்று முருகன் கேட்கிறான். அருணகிரி நாதர் ஆகிய நோயாளி பல நோய்களை உடையரேனும் அவற்றுள் மிக்க துன்பத்தைத் தரும் ஒன்றை எடுத்துச் சொல்கிறார். சித்ர மாதர் அல்குல் தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த மாயா விநோத மனோதுக்கம். 'மாதருடைய மயலில் நான் உருகுகிறேன். அந்த மயலைப் பருகுகிறேன். அது மேன்மேலும் பெருகுகிறது. அதனால் துவண்டு போகிறேன். ஏதேனும் நல்லது செய்யலாம் என்று நினைத்தால் எனக்கு உறுதி இருப்பது இல்லை. அந்த மயல் எனக்குத் துயரத்தைத் தந்து நேர்மையாக வாழவும், உறுதியோடு நிற்கவும் வலு இல்லா மல் செய்துவிடுகிறது; துவட்சியைத் தருகிறது. நான் என்ன செய்வேன்' என்று புலம்புகிறார். காமத்தால் பற்றப்பட்டவர்கள் துவண்டு வீழ்கிறார்கள். துவளுவது போல அறிவு மாறி வீழ்கிறார்கள். நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பு இருந்தாலும் அதனைச் செய்வதற்கு உடம்பு இடம் கொடுப்பது இல்லை. நல்லதைப் பேச முடிவது இல்லை. காமத்தின் வலிமை மனிதனுக்கு உண்டாகின்ற நோய்களுக்குள் மிகவும் கொடி யது காம நோய். அதனை மாய்ப்பதற்கு மன வலிமை அதிகமாக 28S9