பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வேண்டும். காமம் என்ற சொல்லுக்கு ஆசை என்பதுதான் பொருள் மற்ற ஆசைகள் எல்லாவற்றையும்விட வலிதாகப் பெண் ஆசை இருப்பதனால் காமம் என்றவுடன் பெண் ஆசை என்ற நினைவே உண்டாகிறது. சில பொதுப் பெயர்கள் சிறப்பாக உள்ள பொருள் களைக் குறிப்பது உண்டு. ஈசுவரன் என்பது பொதுவான பேரானா லும் சிவ பெருமானைக் குறிக்க வழங்குகிறோம. பூ என்று தாமரைப் பூவைக் குறிப்பது உண்டு. இத்தகைய சொற்கள் பல பொருளுக்குப் பொதுவான பெயராக இருந்தாலும் அந்தப் பொருள் களுக்குள் சிறப்பானவற்றைக் குறிப்பிடுவது மரபு. அதுபோல் காமம் என்ற சொல் எல்லா ஆசைகளுக்கும் பொதுவான பெய ராக இருந்தாலும் அவைகளுக்குள் மிகவும் வலிய பெண்ணா சையைச் சிறப்பாகக் குறிக்கும். அப்படிக் குறிக்கும் வழக்கத்தினா லேயே காமத்தின் கடுமையும் வலிமையும் நன்கு விளங்கும். ஆகையால் அருணகிரியார் மாயா விநோத மனோதுக்கத்தின் விளைவாகப் பல இருந்தாலும் மங்கையர் ஆசையை எடுத்துச் சொன்னார். அப்படிச் சொன்னாலும் மற்ற ஆசைகளையும் நாம் கொள்ள வேண்டும். தலைமையாக உள்ள ஒன்றைச் சொல்லி அதனால் மற்றதைப் பெறுவதற்கு இலக்கணத்தில் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதை உபலட்சணம் என்று சொல்வார்கள். உபலட்சணத்தால், சித்ர மாதர் ஆசையைக் சொன்னாலும் மற்ற ஆசைகளையும் கொள்ள வேண்டும். சித்ர மாதர் ഴ്ക്കേ அருணகிரியார் குறிக்கும் மாதர்கள் இல்லறத்திற்குத் துணையாக இருக்கும் தர்ம பத்தினிகள் அல்ல. சித்ரம்-அலங் காரம். பிறர் உள்ளத்தைக் கவர்வதற்கு விளம்பரம் செய்து கொள் வது போலத் தம்மை நாலுபேர் பார்க்கும்படியாக அலங்காரம் செய்து கொள்ளும் தீய மாதரைத்தான் சித்ர மாதர் என்று குறித் தார். அவர் காலத்தில் அத்தகையோர்கள் மிகுதியாக இருந்தார்கள் போலும் அத்தகைய தீய மாதர்களுடைய வலையிலே பட்டு உருகிப் பெருகித் துவளும் மனோதுக்கத்தை அருணகிரியார் குறிக்கிறார். "எனக்கு என்று செயல் ஒன்றும் இல்லாமல் நான் துவண்டு போகிறேன். அதற்குக் காரணம் என் தலைக்கு ஏறிய பித்தம். 27Ο