பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு அந்தப் பித்தம் மேன்மேலும் பெருகிக் கொண்டு வருகிறது. சித்திர மாதரால் வந்த பித்தம் அது. இப்படி எனக்குப் பித்தம் பிடிப் பதற்கு மூலகாரணமாக இருப்பது மனத்தினால் உண்டாகின்ற துக்கம். மனத்தின் போக்கில் சென்று மயலில் மூழ்கித் துவண்டு செயல் மறந்து இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது மாயா விளையாட்டு. இந்த மாயா விநோதத்தினால் வந்த துக்கம் மாய வேண்டும். மாயை விளையாட்டு மாய்வதற்கு ஞான விளையாட்டுத் தான் மருந்து. அதற்கு உன்னுடைய திருவருள் வேண்டும்' என்பது அருணகிரியார் பிரார்த்தனை. ஞானம் நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்? 'நீயான ஞான விநோதம்' என்றார். முருகப் பெருமான் ஞானமே திருவுருவாக இருப்பவன். 'ப்ரக்ஞானம் ப்ரம்மம்' என்பது மகாவாக்கியம். கடவுளை அறிவது என்றாலும் ஞானத்தை அறிவது என்றாலும் ஒன்றுதான். 'அறிவை அறிவது பொருளென அருளிய பெருமானே' என்று திருப்புகழில் அருணகிரியார் அருளியிருக்கிறார். "நீயே அந்த ஞான மயமாக இருக்கிறாய். நீ என் உள்ளத்தில் வந்துவிட்டால் என் மனம் ஞான வாசனை வீசும். அதிலிருந்து விளையும் விளையாட்டு ஞான விளையாட்டு ஆகிவிடும். அதனை நீ அருள் செய்யவேண்டும். நீ எப்போது அப்பா அருள்வதற்கு நினைத்திருக்கிறாய்?' என்று அருணகிரியார் முருகப் பெரு மானைப் பார்த்துக் கேட்கிறார். ஞானக் குழந்தை சேயான வேல் கந்தனே! என்று முருகனை விளிக்கிறார். சேய் என்பதற்குச் சிவந்த நிறம் உடைய முருகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கே குழந்தை என்று பொருள் கொள்வது சிறப்பாகும். விளையாட்டைச் சொல்லும்போது குழந்தை என்று சொல்வதுதான் பொருத்தம். 271