பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஞான விளையாடல் செய்கின்ற எம்பெருமான் நம்மையும் அந்த விளையாட்டில் குழந்தையாகக் கூட்டிக் கொள்வான். ஆகவே சேயான என்பதற்குக் குழந்தைத் தெய்வமாக நிலவுகின்ற என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஞான விளையாடலைச் செய்யும் அன்பர்களுக்கு எல்லாம் தலைவனாகிய ஞானக் குழந்தை தன்னுடைய கையிலேயே அந்த விளையாட்டுக்குரிய கருவியை வைத்திருக்கிறான். பொல்லாத குழந்தை கையில் கத்தியையும் கோலையும் வைத்திருக்கும். நல்ல குழந்தைகள் பந்தும் பொம்மையும் வைத்திருக்கும். கல்லையும் கத்தியையும் கொண்ட அந்தக் குழந்தை தீங்கு செய்யுமே என்று பெரியவர்கள் அஞ்சுவார்கள். பந்தையும், பொம்மையையும் உடைய குழந்தையைக் கண்டால் பிற குழந்தைகள் நாடி ஓடி விளையாட வருவார்கள். ஞான விநோதம் நடத்தும் பெரு மானாகிய முருகன் தன்னுடைய அன்பர்களையும் ஞானத் திரு விளையாட்டில் பயிலும்படி அருள் பாலிப்பான். அவன் தன் னுடைய கையில் ஞானத்தையே வேலாக வைத்துக் கொண்டிருக் கிறான். ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் உடைய இளங் குழந்தையாகப் பார்வதி தேவியால் ஒன்றுபட்டபோது அவனுக்குக் கந்தன் என்ற திருநாமம் வந்தது. ஆகவே கந்தன் என்ற பெயரும் அவனுடைய குழந்தைப் பிராயத்தை நினைப் பூட்டுகிறது. அவன் குழந்தை; ஞான விளையாட்டுக் குழந்தை; அதற்கு ஏற்ற ஞான வேலைத் திருக்கரத்தில் கொண்டிருக்கிறான்; சரவணப் பூம்பொய்கையில் விளையாடும் குழந்தை என்ற கருத்துக்கள் நினைவுக்கு வரும்படியாக, சேயான வேல் கந்தனே! என்ற பாடினார். அத்தகைய குழந்தை திருச்செந்தூரில் இருக்கிறானாம். உயிர்கள் விளையாடும் இடத்திற்கு வந்து விளையாடுகின்ற குழந்தை அவன். ஏதோ கந்த லோகத்திலும், சரவணப் பூம் பொய்கையிலும் மாத்திரம் விளையாடிக் கொண்டிருந்தால் நாம் அவனோடு சேர்ந்து விளையாட இயலாது. அவனோ மிகவும் கருணை 272