பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு உடைய குழந்தையாதலின் நாம் மாயா விளையாட்டு விளையாடு கிற உலகத்திற்கே வந்து திருச்செந்தூரில் இருக்கிறான். சேயான வேல் கந்தனே செந்திலாய்! இந்தப் பாட்டில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, 'நீ எனக்கு இதனை அருள வேண்டும்" என்று கேட்பது. இரண்டு, முருகப் பெருமானின் பெருமையைச் சொல்வது. மூன்று, "நான் இந்த நிலையில் இருக்கிறேன்' என்று சொல்வது. முதலில் எது வேண்டுமோ அதைச் சொன்னார். பசியினால் துடிக்கிறவன் சோறு சோறு என்று கத்துவான். தீப்பற்றினால் தண்ணீர் தண்ணிர் என்று கத்துவார்கள். அப்படி முதலில், நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்! என்று கதறுகிறார். பின்பு, 'நீ நல்ல மருத்துவன் ஆயிற்றே. உன்னால் என் னுடைய வியாதி தீருமே. நீ விளையாடல் புரியும் சின்னஞ்சிறு குழந்தை அல்லவா?’ என்று சொல்வது போல, "சேயான வேல் கந்தனே' என்றார். அதன் பிறகு தமக்கு வந்த வியாதியைச் சொல்கிறார். டாக்டர் வேறு, மருந்து வேறு என்பது உலகியல் மருத்துவம். இங்கே மருந்தான ஞானமும், அதைத் தருபவனாகிய ஆண்ட வனும் ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். "நீயான ஞானம்' என்று பேசுகின்றார். அதில் கலந்து கொண்ட ஆத்மாவும் ஒன்றாகி விடுகிறது. இதுதான் அத்துவித நிலை. அவனை அணுகி அணுகி அவனோடு ஒன்றுபடும் முடிவான இன்பத்தைத் தருகின்ற விளையாட்டு, ஞானவிளையாட்டு. விளையாட்டின் இயல்பு விளையாட்டு என்பதற்கும் வினை என்பதற்கும் வேறுபாடு உண்டு. வினையில் ஒரு கட்சி இன்னொரு கட்சிக்குப் பகையாக இருக்கும். விளையாட்டில் இரு வேறு கட்சி இருந்தாலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பகை நட்பு இல்லாமல் விளை யாட்டு நடக்கும். விளையாட்டு முடிந்தவுடன் இரண்டு கட்சி களும் சேர்ந்து மகிழ்ச்சி அடையும். 273