பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒரு கட்சி வெற்றி, மற்றொரு கட்சி தோல்வி என்பது விளையாடும்போது இருந்தாலும் இன்பம் அநுபவிக்கும் போது இல்லை. அதுதான் விளையாட்டின் பெருமை. விளையாட்டின் முடிவு இன்பந்தான். மாயா விளையாட்டைக் குழந்தை செய்வ தனால் விளையாட்டு என்று சொல்கிறோமே யொழிய அதன் பயன் வினையாக ஏற்படுகிறது. ஆகவே அதன் விளைவு துன்பந் தான். இன்பம் நல்குகின்ற விளையாட்டை நாம் விளையாடாமல் துன்பம் நல்குகின்ற மாயா விளையாட்டை, வினை விளை யாட்டை, மேற்கொண்டு வாழ்கிறோம். நாம் இதை நினைத்து வருந்துவதற்கு இந்தப் பாட்டினால் கற்பிக்கிறார் அருணகிரியார். மணிவாசகர் வாக்கு மணிவாசகப் பெருமானும், ஞான நாடகம், ஊன நாடகம் என்ற இரண்டையும் சொல்கிறார். 'வான நாடரும் அறியொ ணாதநீ மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ ஏனை நாடரும் தெரியொனாதநீ என்னை இன்னிதா ஆண்டு கொண்டவா! ஊனை நாடகம் ஆடு வித்தவா! உருகி நான்உனைப் பருக வைத்தவா! ஞான நாடகம் ஆடு வித்தவா! நைய வையகத் துடைய இச்சையே. அமரலோகத்தில் இருக்கும் தேவர்களும் இந்த உலகத்தில் அங்கங்கே இருக்கும் மக்களும் இன்னார் என்று தெரிவிக்க முடியாத பெரிய கடவுள் இறைவன்; வான நாடரும் அறியொணாத வன். அவனை வேதமே இன்னும் தெரிந்து உணரவில்லை. அத்தகைய பெருமான் மாணிக்கவாசகருக்கு ஓடி வந்து அருள் செய்தான். முதலில் தன்னுடைய திருவருளைப் பெறாமல் உலகத்தில் அலைய வைத்தவன் அவன்தான். உலக்கத்தில் அலைய வைத்தவன் அவன்தான். உலகத்தில் ஆசையைப் பெருக்கி ஊனைக் கொண்டு நாடகம் ஆடும்படி அவரைச் செய்தவன் அவனே. பின்பு அந்த ஆசை மாய, ஞான நாடகம் ஆடச் செய்தவனும் அவனே. 274