பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நீயான ஞான விநோதந் தனை என்று நீ அருள்வாய், சேயான வேல்கந்த னே!செந்தி லாய்!சித்ர மாதர் அல்குல் தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளும்இந்த மாயா விநோத மனோதுக்க மானது மாய்வதற்கே? (குழந்தைத் திருக்கோலங் கொண்டவனாகிய வேலாயுதத்தைப் பிடித்த கந்தவேளே திருச்செந்தூரில் எழுந்தருளியிருப்பவனே தம்மைப் பிறர் காணும் பொருட்டு அலங்காரம் பண்ணிக் கொள்ளும் ஒழுக்கம் கெட்ட மாதர்களுடைய உறுப்பில் தோய்ந்து உருகிச் சிற்றின்பத்தைப் பருகி அதனால் மயல் பெருகிச் செயலற்று வாட்டம் அடையும் இந்த மாயை விளையாட்டில் வரும் மனத்துயரம் மாயும்பொருட்டு, நீயன்றி வேறு அல்லாத ஞான விளையாட்டை எப்போது நீ அடியேனுக்கு அருள் செய்வாய்? விநோதம் - விளையாட்டு. சேய் - குழந்தை. சித்ரம் - அலங்காரம்; வியப்பை ஊட்டும் என்றும் சொல்லலாம். அல்குல் - பெண் அடையாளம். துவளும் - வாடும்.)