பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 உருவத்தில் கடவுளை வழிபட்டு, வெவ்வேறு மந்திரங்களை ஜபம்செய்து, வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்தவர்கள் வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்ப மும் ஒன்றே. அந்த இன்பத்தைப் பிறர் பெறவேண்டுமானால், முன்னாலே பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிந்து கொண்டு அந்த வழியில் நடக்க வேண்டும். சம்பிரதாயம் எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்க வேண்டும். இதைத்தான் சம்பிரதாயம் என்றும், பத்ததி என்றும், மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ்வேறு பெயராலே சொல் கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திரு வருளைப் பெறலாம். முருகனை ஒருவன் கும்பிடுகிறான். கும் பிடுகிற முறையைப் பெரியவர்களிடத்தில் கற்றுக் கொள்கிறான். அவனுடைய திருவுருவத்தைக் கண்டு வழி படுகிறான். அவனுக்கு ஆண்டவன் உருவோடு தோன்றினால், மயில் வாகனப் பெரு மானாகத் தோன்றுவான். அவனிடத்தில் வேல் தோன்றும். கோழி தோன்றும். விநாயகரை உபாசனை பண்ணுகிறவர்களுக்கு ஆனை முகப் பெருமானாக ஆண்டவன் தோன்றுவான். அம்பிகையைப் பூஜை செய்பவனுக்குத் திரிபுரசுந்தரியாக எம்பெருமாட்டி தோன்றுவாள். நம்முடைய உள்ளத்தில் எந்த மூர்த்தியாகிய விதையைப் புதைக்கிறோமோ அதுவே பின்னால் விளைகிறது. வித்து என்பது மரம் தோன்றாத நிலையில் இருப்பது. விக்கிரகத்தை வைத்து உபாசனை பண்ணுவது வித்தைப் புதைக்கிற மாதிரி. ஆனால் வித்தைப் புதைத்தவன் சும்மா இருந்தால் அது விளையாது. அதற்கு நீர் விட்டு, உரமிட்டு, பல காலம் பாதுகாத்து வந்தால் அந்த வித்துப் பெரியதாக விளைந்து மரமாவதைக் காணலாம். அப்படியே கோயில்களில் உள்ள மூர்த்தியைப் பார்த்து, பார்த்த படியே நின்றுவிட்டால் ஒன்றும் பயன் இல்லை. அந்த மூர்த்தியை நம்முடைய உள்ளத்தில் புதைத்துத் தியானம் பண்ணி அன்புநீர் வார்த்து, வைராக்கியம் என்ற உரம் இட வேண்டும். அப்போது கோயிலில் கண்ட மூர்த்தி, இன்பம் மிக்க பெரிய உருவம் எடுத்துச் சோதி வடிவமாகத் தோன்றுவார். 284