பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 போன்ற பேரிருள் வேறு இல்லை. நாமும் ஒரு வகையில் குருடர் களே. உலகம் முழுவதும் இருள் நிரம்பி இருக்கிறது. அதனால் “மா இருள் ஞாலம்' என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் வாழ்கிற வாழ்க்கை இருட்டு வாழ்க்கை. இருட்டுக் காரியம் திருட்டுக் காரியம். நாம் செய்கின்ற காரியம் அத்தனையும் திருட்டுக் காரியங்களே. இறைவனுடைய திருவருளாகிய செல்வத்தைப் பெறுவதற்குரிய முயற்சிகள் நேர்மையான காரியங்கள். அப்படி அல்லாதன யாவும் அஞ்ஞான இருளில் செய்கிற திருட்டுக் காரியங்களே. கமலம் விரிதல் இருட்டிலும் ஒளி இருக்குமானால் பல காரியங்களைச் செய்யலாம். ஆனால் தாமரை மலராது. இரவு நேரத்தில் மின்சார விளக்குப் போட்டுக் கொண்டு வேலை செய்கிறோம். நிலா, அக்கினி முதலியவை வந்து ஒளி வீசினாலும் தாமரை மலராது. அதுபோலவே சூரியன் முதலிய பெரிய ஒளிகள் ஒளியை வீசினாலும் நமக்கு, அக இருட்டுப் போகாது. அந்த இருட்டைப் போக்குவதற்கு ஞான பானுவாகிய முருகப் பெருமானுடைய திருவருட் கதிர் வீச வேண்டும். . இறைவன் திருவருள் ஒளியிலே அடியார்களின் உள்ளக் கமலங்கள் மலரும்; உள்ளத்தில் இருக்கிற கட்டுப் போய்விடும். இப்போது சில சமயங்களில் நமக்கு இறைவனுடைய நினைவு மின்னல்போல வருகிறது. அவன் திருவருளைச் சில சமயம் நினைக்கிறோம். மின்னல் கீற்றைச் சூரியஒளி ஆக்கிக் கொள்ள முடியுமா? சில சமயம் எம்பெருமானை நினைந்து ஒரு துளி கண்ணிர் விடுகிறோம். கொஞ்சம் மனத்தில் அமைதி பெறுகிறோம். இந்த அமைதிதான் அருணகிரியார் சொல்கிற இன்பம் என்று நினைத்து ஏமாந்து போகக் கூடாது. இறைவனுடைய திருவருள் ஒளி உள்ளக் கமலத்தில் பட வேண்டுமானால் நாம் அந்தப் பெருமானை நினைத்து நம்முடைய செயல் ஒன்றும் இல்லை என்று இருக்க வேண்டும். நான், எனது' எனற் கட்டை விட்டுவிட்டு, நான் செய்கிறேன் என்று நினைப்பதை விட்டுவிட்டால் இறைவனுடைய அருள் ஒளி பாயும். செயல்மாண்டு அடங்கத் தொடங்கினால் உள்ளக் கமலம் மலர்ந்து அதிலிருந்து இன்ப ஊற்றுப் புறப்படும். 29Ꮯ)