பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் சுகத்துக்குக் காரணம் செயல் இல்லாமல் இருப்பது சுகத்தைத் தரும். நன்றாகத் துங்குபவர்கள், 'நான் சுகமாகத் தூங்கினேன்' என்று சொல்வார்கள். தையும் காலும் அசையாமல் துங்கினாலும் தூக்கத்தில் சொப்பனம் கண்டால் அது நல்ல தூக்கம் ஆகாது. தூக்கத்தில் பிதற்றுபவர்கள் இருக்கிறார்கள். சிலர் சொற்பொழிவு கூடச் செய்வார்கள். தரக்கத்தில் எழுந்து நடமாடுகிற வியாதி ஒன்று உண்டு. அதை ஸோம்னாம்பாலிஸம் (Somnombolism) என்று சொல்வார்கள். கையும் காலும் அசையாமல் படுத்துக் கொண்டுவிட்டால், "செயல் அடங்கிப்படுத்திருக்கிறான்' என்று சொல்வதற்கு இல்லை. மனம் வேலை செய்யாமல் அடங்கி நின்றால் அப்போது ஒரு வகையான சுகம் உண்டாகிறது. நாம் தூக்கத்தில் செயல் இழந்திருக்கும்போது இந்த இன்பம் உண்டாகிறது என்பதைப் பிரத்தியட்சத்தில் பார்க்கிறோம். அதுபோலவே உண்மையாக எல்லாச் செயல்களும் அடங்கி மனம் அலையாமல் இருந்தால் அவனுக்கு இன்பம் தோன்றுகிறது. நாம் இப்போது இருக்கிற விழிப்பு நிலைக்குச் சாக்கிரா வஸ்தை என்று பெயர். படுத்துக் கொண்டு தூங்கும் போது கனவு காண்கிறோம். இது சொப்பனாவஸ்தை. கனவு காணாமல் இருக்கும் நிலை சுழுத்தி அவஸ்தை. அந்தச் சுழுத்திதான் இன்பத்தைத் தருவது. கையையும் காலையும் அசைத்து வெளியில் நடமாடு வதைவிடப் படுத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் சுகத்தைத் தரும். படுத்துக் கொண்டிருப்பதிலும் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு தூங்கினால் அப்போது உண்டாகும் சுகம் அதிகம். அதிலும் கனவு இல்லாமல் தூங்கினால் அந்தச் சுகம் மிகவும் அதிகம். இளைப்பாறுதல் என்று சொல்வதற்கே செயல் இல்லாமல் இருத்தல் என்று பொருள். தினந்தோறும் காரியாலயம் சென்று உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் செயல்தான் நமக்கு ஊதியம் தருகிறது. ஆனால் சாயங்காலம் எப்போது வரு கிறதென்று எதிர்பார்க்கிறோம். அந்தச் செயலை விட்டுவிட்டு ஒய்வு பெறவேண்டுமென்பது நம்முடைய ஆசை. மற்றவர்களை விடத் தொழிலாளர்கள்தாம் எப்போது வீட்டுக்குப் போவோம் 291