பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காரியாலயம் விடுகிற நேரத்தையே தொழிலாளி எதிர் பார்த் கிறான். நாமும் எதிர்பார்க்கிறோம். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை எப்போது வருகிறதென்று பார்க்கிறோம். இவ்வாறு எதிர்பார்ப்பதற்குக் காரணம் அந்த வேளைகளிலும், அந்த நாட்களிலும் சும்மா இருக்கலாம் என்பது தான். தினந் தோறும் செய்கின்ற காரியத்தை விட்டுவிட்டு ஒய்வாக இருப்பதை நாம் சும்மா இருப்பது என்று சொல்கிறோம். ஒரு நாளைக்குச் சும்மா இருக்க நமக்கு இரவு கிடைத்திருக்கிறது. ஒரு வாரத்திற்குச் சும்மா இருக்க ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வருஷத்தின் முடிவில் கோடை விடுமுறை கிடைக்கிறது. இடையிலும் சில விடுமுறை கள் உண்டு. அப்பொழுதெல்லாம் வழக்கமாகச் செய்கிற வேலை களை விட்டுவிட்டுச் சும்மா இருக்கிறார்கள். அப்படி இருப்ப தால் ஏதோ சுகம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மனிதனுக்கு இரவில் தூக்கத்தைக் கொடுத்திருப்பது உடம்பின் அலுப்பைப் போக்கிக் கொள்வதற்காக. மனம்கூட அப்போது தூங்குகிறது. எதை எதையோ நினைந்து கவலைப்பட்டுக் கொண் டிருப்பவனும், யார் யாரிடமோ பகை உணர்ச்சி கொண்டவனும் தூங்கும்போது அந்த நிலை மாறி ஓய்வு எடுத்துக் கொள்கிறான். அமைதியையும் இன்பத்தையும் அவன் அப்போது அநுபவிக் கிறான். உடம்பு மாத்திரம் கட்டை மாதிரி இருந்தால் போதாது. மனம் தூங்கவேண்டும். அதுதான் செயல் அற்ற நிலை என்பது. யாருக்கு மனத்தில் கவலை இல்லையோ, யார் நல்ல முறை யில் உள்ளவர்களோ அவர்கள் உடம்பும் தூங்கும்; உள்ளமும் தூங்கும். குழந்தை நன்றாகத் தூங்குகிறது. அதனுடைய உள்ளத் தில் மாசு இல்லை. மற்ற எல்லோரையும்விடக் குழந்தைக்கு அதிக நேரம் தூக்கம் கிடைக்கிறது. அப்படித் தூங்குவதற்கு உரிமையும் ஆற்றலும் அதற்கு உண்டு. தூங்கி எழுந்தவுடன் அது மிக்க மலர்ச்சியோடு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் இருந்த தொல்லை எல்லாம் நீங்கி ஓய்வு பெற்றுத் தூங்கும்போது அது வளர்கிறது. அதனால்தான் தமிழில் தூங்குதல் என்ற பொருளில் வளருதல் என்ற சொல் வழங்குகிறது. 2$32