பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வறுமை நோய் இன்றைக்குப் பல பல கட்சிகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள், 'எங்களுக்கு வோட்டுப் போடுங்கள். வறுமை இல்லாமல் நீங்கள் எல்லோரும் வளவாழ்வு வாழ நாங்கள் வழி வகுக்கி றோம்" என்று சொல்கிறார்கள். அதைப்போலவே அருணகிரியாரும், "அப்பா, அவன் நாமத்தைச் சொல்வதனால் இம்மையிலே என்ன பயன் என்றுதானே கேட்கிறாய்? எல்லாவற்றையும் கெடுக்கும் வறுமைக்கு ஆளாகாமல் இருக்கலாம்' என்கிறார். மிடி என்பது வறுமை. முழுதும் கெடுக்கும் மிடி என்கிறார். வறுமை வந்தால் போதும்; நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பாராமல் எல்லோரையும் கெடுத்துவிடும்; அழித்துவிடும். வறுமை யினால் கோபம், சண்டை, கொலை, களவு முதலிய எல்லாத் தீமைகளும் மலிகின்றன. அதனால் மிகக் கோபமாக, 'இன்மை எனஒரு பாவி' என்கிறார் வள்ளுவர். வறுமை வந்துவிட்டால், நம்மிடமுள்ள எல்லாப் பண்புகளும் கெட்டுவிடும். 'மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்முயற்சி தாளாண்மை-தேனின் கவிசந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்போம் பறந்து' என்று ஒளவைப் பிராட்டி சொல்கிறாள். வறுமையால் பசி ஏற்பட, அந்தப் பசியினால் நற்குணங்கள் எல்லாம் கெட்டுப் போய்விடும். நோயின் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை நோயாளி யும் உணர்கிறான். அந்த நோய் ஏற்பட்டால் என்ன என்ன கொடு மைகள் விளையும் என்பதை டாக்டரும் அறிவார். நோயாளிக்கு நோயின் கொடுமை தெரிகிறது; அதைப் போக்கும் மருந்து தெரியவில்லை. டாக்டருக்கு நோயின் கொடுமையும் தெரியும்; இன்ன மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்த நோய்க்கு உள்ளாக மாட்டார்கள் என்றும் அவர் சொல்வார். நமக்கு வறுமையின் கொடுமை தெரிகிறது. "ஐயோ வள வாழ்வு குன்றி நான் துன்புறுகிறேனே!” என வாய் விட்டும் அலறு 2O