பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் நாமும் குழந்தைபோல இருந்தால் தூக்கத்தை நல்ல வகை இல் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதுகூட முதல் நாள் உழைத்துவிட்டு இரவு தூங்கினோமானால் மறுநாள் எழும்போது சுறுசுறுப்பாய் இருக்கிறது. முதல் நாள் நினைத்த நினைப்புகளை மாற்றிக கொண்டு, கவலைப்படாமல் தூங்கிவிட்டால், மறுநாள் ஒரு பங்குக்கு இரு பங்கு வேலை செய்ய முடிகிறது. இப்படிச் சாதாரண வாழ்க்கையில் இருக்கிறவன் ஒழுங்காக வேலை செய்து ஒய்வு எடுத்துக் கொண்டு சும்மா இருந்தாலும் தூங்கி னாலும் அதற்குப் பிறகு நல்ல சுறுசுறுப்பும் இன்பமும் உண்டா இன்றன என்பதைப் பார்க்கிறோம். உண்மையாகவே, எல்லாச் செயலும் ஒழிந்து, நினைவு ஒழிந்திருந்தால் அப்போது எத்தனை சுகம் உண்டாகும்! அப்படி இருக்கின்ற நிலைதான் மிகச் சிறந்த நிலை. சுத்தாவஸ்தையில் அதைச் சுஷாப்தி என்று சொல்வார்கள். அத்தகைய இன்பத்தை அடைந்தவர்கள் விழித்திருந்தாலும் அவர்கள் தூங்குபவர்கள் போன்றவர்கள். அவர்கள் மனம் வேலை செய்யாமல் இருக்கும். குருடர்கள் விழித்துக் கொண்டே தூங்குகிறவர்களைச் சகஜ நிலை உடையவர்கள் என்று சொல்வார்கள். அது ஒருவகைச் சமாதி; சகஜ சமாதி என்று பெயர். அத்தகையவர்களை, 'விழித்த கண்குரு டாத்திரி வீரர்’ என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. கண்ணை விழித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் குருடர்களாக இருக்கிறார்களாம். நாம் கண்ணை விழித்துக் கொண்டு பார்க்கிற பொருளை அவர் களும் டார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் காணுகின்ற காட்சி வேறு; நாம் காணுகின்ற காட்சி வேறு. நமக்கு அவர்கள் குருடர் கள்; நாம் காணுகின்ற பொருள்களின் இயல்பை அவர்கள், நாம் காண்பது போலக் கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கு நாம் குருடர்கள். நாம் இருட்டில் உலவுகிறோம். அவர்கள் ஒளியில் உலவுகிறார்கள். தமக்கு என்று செயல் இல்லாமல் இருக்கின்ற அவர்களைச் செயல் மாண்ட பெரியவர்கள் என்று சொல்வார்கள். கர்த்திருத்துவம், போக்திருத்துவமாகிய செய்யும் தன்மை, நுகரும் தன்மை என்னும் இரண்டும் அவர்களுக்கு இல்லை. 293