பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் புவனம் எற்றுதலாவது, அவனளவிலே புவனத்தின் நினைப்பே இல்லாமல் போய்விடுவது. அவன் அடைகிற ஆனந்தம் இட எல்லைக்கு அப்பாற்பட்டது. புவனங்களை எற்றிப் பரந்து நிற்பது. பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும் அதனைக் கடந்து நிற்கிறான். இதைத்தான், புவனம் எற்றி என்று சொல்கிறார். 3 அடையாளம் இனிமேல் சொல்வதுதான் சற்று விசித்திரமாகத் தோற்றும். எல்லாம் போய்ப் பிரபஞ்சத்தை எற்றிவிட்ட பிற்பாடு அந்தப் பரமானந்த வெள்ளத்தின்மேல் ஓர் அமுதம் தோன்றியது என்று சொல்ல வருகிறார். பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன். 'கோயிலில் நான் ஆறுமுகமும், பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானாகக் கண்டேனே! அந்தப் பெருமானை அங்கே கண்டேன்' என்கிறார். இது வியப்பதற்குரிய செய்தி. கோயிலில் கண்ட அந்தத் திருவுருவத்தையே அங்கே காண வில்லை. அது போன்ற ஒன்றைக் கண்டார். ஒருவன் விதை விதைத்து ஆல மரத்தைக் கண்டான். அந்த ஆலமரத்தில் மீட்டும் விதையைக் கண்டான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. நமக்கு விளங்குகிறது. பூமியில் விதைத்த விதை வேறு. அதிலிருந்து வளர்ந்த விதை வேறு. இரண்டும் ஆலம் விதைதான். ஆனால் அது இது ஆகாது. ஆறுமுகமும், பன்னிரண்டு தோளும் உடைய ஆண்டவனை ஒவ்வொரு நாளும் திருக்கோயிலில் தரிசனம் செய்து உள்ளத்தில் பதித்துக் கொண்டார். பின்பு செயல் மாண்டது. ஆனந்த ஊற்றுப் பெருகியது; பரமானந்தக் கடலாகப் பெருகி விட்டது. பெருகின போது மறுபடியும் அங்கே அந்த ஆறு முகத்தைக் கண்டார். சிறிய விதையிலிருந்து மிகப் படர்ந்து சென்ற மரத்தில் மறுபடியும் விதையைக் கண்டேன் என்று சொல்வது போல இருக்கிறது இது. இரண்டு விதைகளும் ஒன்று ஆகா. இந்த விதையினுடைய விளைவு அது. இந்த விதையைப் 299