பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பார்க்கிறவன் மரமாகி வளர்ந்த பிற்பாடு வரும் விதையை ஒருவிதமாக ஊகிக்கலாமே தவிர நேரே பார்க்க இயலாது. பார்க்க வேண்டுமானால் அவ்வளவு காலம் காத்து நின்று வளர்கிற வரைக்கும் முயற்சியைச் செய்து வரவேண்டும். அப்படி, 'பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள் களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்' என்று அருண கிரியார் சொல்வதை நாம் இப்போது திருக்கோயிலில் பார்க்கிற உருவத்தைச் சொல்வதாக எண்ணக் கூடாது. அது எப்படி இருந்தது என்று அடையாளம் சொல்வதற்காக நமது அருண கிரிநாதர் இந்த வகையில் சொன்னார். அவர் கண்டபடி நாம் காண வேண்டுமானால் அவரைப்போல நாம் செயல் மாண்டு அடங்கி நிற்க வேண்டும். இங்கே அருணகிரிநாதப் பெருமான் நமக்குப் பயன்படுகிற ஒரு செய்தியைச் சொல்கிறார். கோயிலுக்குள் நாம் காண்கிற உருவமே வித்தாக நின்று பின்னாலே வேறு வகையில் அநுபவ நிலையில் தோன்றும் என்பதை அவர் புலப்படுத்துகிறார். புவனத் திற்கு நாம் அடங்கி நிற்கும்போது ஆறுமுகநாதனைப் பார்க் கிறோம். அருணகிரியாரும் அவனைப் பார்த்தார். புவனத்தை அடக்கி நிற்கின்ற அந்தச் சமயத்திலும் ஆறுமுக நாதனை நாம் காணலாம். இங்கே கண்ட ஆறுமுகநாதன் அங்கேயும் வந்து நிற்கிறான், வேறு வகையில். படமும் ஆளும் இன்னும் இதைச் சற்றுத் தெளிவாகப் பார்க்கலாம். நம் முடைய வீட்டில் ஒரு படம் மாட்டி இருக்கிறார்கள். நம்முடைய உறவினர் அவர். மிகவும் நல்லவர் என்று தாய் தந்தையர்கள் சொல்கிறார்கள். நாம் அவரைப் பார்த்ததில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறோம். 'அவர் எங்கோ பம்பாய்க்குப் போனார். அங்கே தங்கிவிட்டார். அவரை நான் கண்டு பல காலம் ஆயிற்று' என்று தந்தையார் சொல்கிறார். நாம் தினந் தோறும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். ஒரு சமயத்தில் பம்பாய்க்குப் போகிறோம். போகிற போது அந்தப் படத்திலுள்ள மனிதரைக் காண்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. கண்டவுடன் நம்முடைய வீட்டுப் படம் நினைவுக்கு வருகிறது. 3CO