பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் ஆடையாளம் கண்டு கொள்கிறோம். உடனே அவரோடு கலந்து பேசி அவருடைய அன்புக்குப் பாத்திரமாகிறோம். ஊருக்கு வந்தவுடன் நம்முடைய தாய் தந்தையர்களிடம், "இதோ இந்த அறையில் இருக்கிறாரே, அவரை நான் பம்பாயில் பார்த்தேன்' என்று சொல்கிறோம். 'இந்தப் படத்தில் உள்ளவரை நான் பார்த்தேன்' என்று சொன்னால் இந்தப் படத்திலேயே கை காலுடன் இருக்கிறார் என்று பொருள் அல்ல. இங்கே வெறும் அடையாளமாத்திரமாகக் கண்ட திருவுருவத்தை அங்கே அது பவிக்கும் வண்ணம் பார்த்ததாகக் கொள்ள வேண்டும். அதுபோலவே நாம் நாள்தோறும் கோயிலில் காண்கின்ற விக்கிரகம் பின்னாலே நாம் அநுபவிக்கின்ற அநுபவத்திற்கு அடையாளம். இந்த அடையாளத்தை உள்ளத்தடத்தில் நட்டு அன்புநீர் பாய்ச்சி வளர்க்கின்ற அடியார்கள் அந்தப் பெருமானை நேரில் கண்டு இன்பத்தை நுகரலாம். - இப்போதும் அப்போதும் 'இப்போது அறிகுறியாகக் காணும் ஒன்று அப்போது அநுபவப் பொருளாக நிற்கும். இப்போது சர்க்கரை என்று எழுதி வைக்கிற பெயர் அப்போது நாவினாலே சுவைப்பதாய் இருக்கும். இப்போது பொம்மையாகப் பார்க்கிற ஒன்று அப்போது உயிருள்ள உருவமாக இருக்கும். இப்போது வெறும் கட்டையாக இருக்கிறது அப்போது ஒளிவடிவமாகத் தோன்றும் என்று மேன்மேலும் வருணித்துக் கொண்டு போகலாம். எம்பெருமானுடைய ஆறுமுகத் திருக்கோலம் நாம் வழிபடத் தொடங்கும் போது நம் கண் முன்னால் திருக்கோயிலில் வடிவமாக நிற்கிறது. செயல் இழந்த அநுபவ நிலையில் நிற்கும்போது வேறு ஒருவகையில் அமுதமாக நிற்கிறது. ஆதியிலே தோன்றிய ஆறுமுகம் அந்தத்திலும் தோற்றும். இதனை அருணகிரியார் திருப்புகழில், 'ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறு முகம்என்று தெளியேனே' என்று சொல்லியிருக்கிறார். 3O+