பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் கிறோம். நோயுற்றவன் நோயைப் போக்கும் மருந்து உட்கொள்ள மல், தற்கொலை செய்து கொள்வது போல, வறுமையின் கொடு மைக்கு ஆளானவன், முழுதும் கெடுக்கும் மிடியைப் போக்கும் வழி தெரியாமல் தவறான செய்கைகளைச் செய்து பின்னும் துன்புறுகிறான். அருணகிரியார் மருந்து சொல்கிறார். இருவகை வாழ்வு 1ொன வாழ்வைப் பார்த்து நின்றவர்கள் யாரும் வைய வாழ்வை மறக்கவில்லை. உடம்பொடு வாழும் வாழ்க்கையில் நோய் இல்லாமல் வாழ வேண்டுமென்பது போலவே, வறுமை இல்லாமல் வாழவேண்டுமென்றும் விரும்பினார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நோக்கி எனக்குச் சோறு வேண்டும், நல்ல ஆடை அணிகள் வேண்டும் என்று கேட்டார்; அதோடு மாத்திரம் நிற்கவில்லை. உடம்புக்குப் பூசிக்கொள்ள கஸ்தூரிவேண்டும், புனுகு வேண்டும் எனக் கேட்கிறார். 'கத்தூரி கமழ்சாந்தம் புழுகினொடு வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.' அவர் வான வாழ்வை நினைந்து வைய வாழ்வை மறந்தவரா? வைய வாழ்வு வாழத் தெரியாதவரா? இறைவனைப் பார்த்துப் பொன்னையும பொருளையும் போகத்தையும் புகழையும் கேட்கிறார். இம்மைக்கு மாத்திரமன்றி மறுமைக்கும் மோட்சத்தை வேண்டுகிறார். இறைவனை நம்பினால் இந்த உலகத்திலும் வாழலாம், மறுமை வாழ்வும் ஒருங்கே கிடைக்கும் என்று அவர் சொல்கிறார். 'இம்மை யேதரும் சோறும் கூறையும்; ஏத்த லாம்;இடர் கெடலுமாம்; அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே." ஞானப் பாலைக் குடித்த குழந்தையாகிய சம்பந்தர், "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்" என்கிறார். இந்த மண்ணிலேயும் நல்லவண்ணம் வாழலாம்; ஒவ்வொரு நாளும் சுகமாக வாழலாமாம். இறைவனை நம்புகிற வர்கள் இந்த உலகத்தில் அப்படி வாழலாம். இறைவனை 21.